Published : 12 Apr 2015 11:58 AM
Last Updated : 12 Apr 2015 11:58 AM

புதிதாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரம் கூட்டுறவு ஊழியர்கள் பணியில் சேருவதில் சிக்கல்: ஓராண்டில் பட்டயப் படிப்பை முடிக்க புது நிபந்தனை

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கூட்டு றவு பணியாளர்களில் 3 ஆயிரம் பேர் பணியில் சேருவதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. அவர்கள் ஓராண்டுக்குள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியை முடிக்காவிட்டால், தேர்ச்சி பெற்றது ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டு றவு வங்கிகள், கூட்டுறவு சங்கங் களில் 3,589 உதவியாளர் பணியிடங் களை நிரப்ப மாநில கூட்டுறவு பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தியது. 2 லட்சத்துக்கும் மேற் பட்ட பட்டதாரிகள் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்ற 7,200 பேருக்கு 2012 டிசம்பர், 2013 ஜனவரி, 2014 செப்டம்பர் என 3 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கு முடிந்த நிலையில், கடந்த மார்ச் கடைசியில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 3,589 பேருக்கும் கூட்டுறவு பணியாளர் தேர்வு வாரியத் தில் இருந்து தேர்ச்சிக் கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. ‘தேர்ச்சி பெற்றவர் கள் கூட்டுறவு பட்டயப் பயிற்சி முடிக் காதவர்கள் என்றால், ஓராண்டுக்குள் அப்பயிற்சியை முடிக்க வேண்டும். அதன் பிறகே பணிநியமன ஆணை வழங்கப்படும். ஓராண்டுக்குள் முடிக் காவிட்டால் தேர்ச்சி ரத்துசெய்யப் படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்கெனவே தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக் கையில், 2 ஆண்டுக்குள் இப்பயிற் சியை முடிக்கவேண்டும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. தற்போது ஓராண் டுக்குள் முடிக்கவேண்டும் என்று கூறப் பட்டிருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் 3 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவு பயிற்சி முடிக்காதவர்கள்தான். புதிய நிபந்தனை காரணமாக, அவர்கள் பணியில் சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. பாதிக்கப்பட்ட தேர்ச்சியாளர்கள் இதுகுறித்து ‘தி இந்து’விடம் மேலும் கூறியதாவது:

‘‘கூட்டுறவு பட்டயப் பயிற்சியை 2 ஆண்டுக்குள் முடிக்கலாம் என்று கூறிவிட்டு, இப்போது திடீரென ஓராண்டு என்கிறார்கள். இல்லாவிட் டால் தேர்ச்சி பெற்றது ரத்தாகிவிடும் என்றும் புதிதாக நிபந்தனை விதிக் கின்றனர். இதுதொடர்பாக பத்திரத் தில் உறுதிமொழி எழுதித் தரவேண் டும் என்கின்றனர்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் பட்டயப் படிப்பு அல்லது தேசிய கூட்டுறவு ஒன்றியம் சென்னையிலும் மதுரையில் நடத்தும் கூட்டுறவு பயிற்சியை முடித்த பிறகே பணிநியமன ஆணை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியை நடத்துகிறது. 10 மாத காலம் கொண்ட இப்பயிற்சி ஜூன் மாதம் தொடங்கும். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டு ஜூன் மாதவாக்கில் தேர்வு முடிவு வெளி யாகும். அதற்குள் ஒன்றரை ஆண்டு ஆகிவிடும். பிறகு எப்படி நாங்கள் ஓராண்டில் இப்பயிற்சியை முடிக்க முடியும்?

எனவே, நாங்கள் கூட்டுறவுப் பட்டயப் பயிற்சியை முடிக்க, தேர்வு அறிவிக்கையில் கூறப்பட்டபடி 2 ஆண்டு அவகாசம் தரவேண்டும். படிக்கும் காலத்தில் உதவித்தொகை வழங்கவேண்டும். அல்லது பணியில் இருந்தவாறே அஞ்சல்வழியில் படிக்க அனுமதி அளிக்கவேண்டும்.’’

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x