Published : 07 Apr 2015 12:56 PM
Last Updated : 07 Apr 2015 12:56 PM

ஆந்திர போலீஸ் துப்பாக்கிச் சூடு: ஓபிஎஸ் அவசர ஆலோசனை

ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

டி.ஜி.பி. அசோக்குமார், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, அரசு ஆலோசகர்கள் ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருப்பதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஸ்ரீவாரிமெட்டு எனும் இடத்தில் இன்று காலை 5 மணியளவில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது ஆந்திர போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x