Published : 17 Apr 2015 07:33 AM
Last Updated : 17 Apr 2015 07:33 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டம்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்ற பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய தாவது:

தமிழகத்தில் பாஜக உத்வேகத் துடன் வளர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 33 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு பல கருத்துகள் இருந்தாலும், தேர்தலை சந்திக்கும்போது அதில் இறுதி முடிவு கிடைக்கும். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை.

வெள்ளை அறிக்கை

ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவத்தில், மிகப்பெரிய கடத்தல் கும்பல்களும், அவர்க ளுக்கு பின்னால் இருக்கக்கூடிய கடத்தல் பேர்வழிகளையும் தப்பிக்க வைக்கவே இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாகக் கூறப் படும் கருத்துகள் அனைத்துமே உருவாக்கப்படுபவை. மோடி அரசு மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப் புடன் இருக்கிறது. நிலம் கையகப் படுத்துதல் மசோதா என்பது மக்க ளுக்கு எதிரானது அல்ல.

அரசின் பயன்பாட்டுக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பயன்படும் வகையில் தரிசு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் பெறும் திட்டம்தான் அது.

இந்த திட்டம் எந்த வகையிலும் தனியாருக்கு துணைபோகாது. விவசாயிகளின் ஒப்புதலுடன் அவர்களது நிலங்களைப் பெற வும், அவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கொடுக்கவும், வேறு வகையில் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் இத்திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

உணவுப் பழக்கம் என்பது தனிநபர் உரிமை. ஆனால் பசுக்களை கொல்வது என்பது பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயத்துக்கும் பெரும் தடை யாக இருக்கும். அதன் காரண மாகவே மகாராஷ்டிராவில் மாட்டி றைச்சிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

பாஜக ஒருபோதும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x