Published : 28 Apr 2015 10:01 AM
Last Updated : 28 Apr 2015 10:01 AM
உலகமெங்கும் எவ்வளவோ வளர்ச்சி வந்துவிட்ட நிலையில், சென்னையை ஒட்டி அமைந்துள்ள ஆவடி பஸ் நிலையம் மட்டும் இன்றும் எந்த வளர்ச்சியும் இன்றி அடிப்படை வசதிகள் இல்லாமலேயே உள்ளது. இதனால், பயணிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட ஆவடி, சென்னையின் முக்கிய புறநகர் பகுதிகளில் ஒன்று. 4 லட்சத் துக்கும் அதிகமானோர் வசிக்கும் பெரு நகராட்சி. இங்குள்ள பஸ் நிலையம் 30 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல் லாமலேயே உள்ளது.
இதுகுறித்து ஆவடி பகுதியைச் சேர்ந்த ராஜன் கூறியதாவது:
ஆவடி மற்றும் ஆவடியைச் சுற்றி யுள்ள பகுதிகளில், குடியிருப்புகள் மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறு வனம், மத்திய பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படைகள், ரயில்வே பணிமனை மற்றும் 15-க்கும் அதிகமான பள்ளிகள் கல்லூரிகள் உள்ளன. இதனால், தினமும் ஆவடிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ஆவடி பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்க இருக்கைகள் இல்லாத தால், நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை. போதிய குடிநீர் வசதி இல்லை. இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் தரும் விளக்கு கள் இல்லை. சுகாதாரமற்ற- கதவுகள் இல்லாத பொதுக் கழிப்பறை சுகாதாரக்கேட்டை உருவாக்கும் இட மாகவே உள்ளது என்றார்.
தமிழ்நாடு முற்போக்கு நுகர் வோர் மையத் தலைவர் சடகோபன் கூறும்போது, ‘ஆவடி பஸ் நிலையத் திலிருந்து சென்னை மாநகர், புறநகர் என பல்வேறு பகுதிகளுக்கு 250-க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படு கின்றன. ஆவடி, பட்டாபிராம், திரு முல்லைவாயில், கோயில் பதாகை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல இந்த பஸ் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
எந்நேரமும் பயணிகள் வந்து போகும் இந்த பஸ் நிலையத்தில் அடிப் படை வசதிகள் மட்டும் இல்லை. 30 வயதை கடந்துவிட்ட இந்த பஸ் நிலையம், இன்னும் ஆரம்ப நிலை யிலேயே உள்ளது வேதனைக் குரியது. பஸ் நிலையத்தின் முன்புற சுற்றுச்சுவரை ஒட்டி யுள்ள மழைநீர் வடிகால்வாய், கழிவு நீர் கால்வாயாக மாறிவிட்டதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பொது மக்கள் பலமுறை அதிகாரிகளின் கவ னத்துக்கு கொண்டு சென்றும் பலனில்லை’ என்றார்.
மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஆவடி பஸ் நிலையத்தில் பயணி கள் இருக்கைகள் அமைக்க தேவை யான நிதியை, சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி ருந்து பெற்றுத் தருமாறு ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத் துறை அமைச்சரு மான அப்துல் ரஹீமிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நடப்பு நிதி யாண்டில் அமைச்சர் நிதிபெற்றுத் தந்துவிட்டால் உடனடியாக பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவோம்’ என்றனர்.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் அமைச்சரைக் கைகாட்டியுள்ளதால், அவர் விரைவில் நிதியை பெற்றுத் தந்து, பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப் பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT