Published : 07 Apr 2015 10:53 AM
Last Updated : 07 Apr 2015 10:53 AM

ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க அலைமோதிய கூட்டம்

ஐசிஎப் பகுதியில் ஆதார் அட் டைக்கு புகைப்படம் எடுக்க கூட்டம் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணா நகர், கொளத்தூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக் கும் பணி ஐசிஎப் ரயில்வே குடியிருப்பில் உள்ள பள்ளியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நேற்று அண்ணா நகர், கொளத் தூர், வில்லிவாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம் வியாசர்பாடி, பெரம் பூர், ஐசிஎப், கொரட்டூர் பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத் தில் திரண்டனர். இதனால் புகைப்படம் எடுக்கும் பள்ளியின் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஆனால் அங்கு பணியில் 4 பேர் மட்டுமே ஈடுபட்டனர். அவர்களில் 2 பேர் விண்ணப்பங்களை கொடுக் கும் பணியையும், ஒருவர் புகைப் படம் எடுப்பதையும், ஒருவர் ரேகை களை பதிவு செய்யும் பணியையும் மேற்கொண்டனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் பொறுமை இழந்து புகைப்படம் எடுக்கும் அறைக்குள் நுழைய முற்பட்டனர். உடனே ஒருவர், பள்ளிக்குள் பொது மக்கள் நுழைய முடியாதவாறு இரும்பு கேட்டை பூட்டு போட்டு பூட்டினார். பூட்டை உடைத்து பொதுமக்கள் உள்ளே நுழைந்தனர்.

அதைத் தொடர்ந்து ஐசிஎப் போலீஸார் விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப் படுத்தி, வரிசையில் நிற்க வைத்து, புகைப்படம் எடுக்க வைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க முடிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பல பகுதிகளை சேர்ந்தவர்களை ஒரே நேரத்தில் வரச்சொல்வது ஏனென்று தெரியவில்லை. இரு மண்டலங்களுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் புகைப்படம் எடுப்பதும் பிரச்சினைகளுக்கு காரணம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x