Published : 10 Apr 2015 09:31 AM
Last Updated : 10 Apr 2015 09:31 AM

அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பட்டியல் வெளியீடு

அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் வரலாறு, புவியியல் உட்பட 12 பாடங்களுக்கு தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை ஆகிய 2 பாடங் களுக்கு மட்டும் தேர்வுப் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1,095 உதவி பேராசிரியர்களை தேர்வுசெய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. மதிப்பெண் பட்டியல் கடந்த 31-ம் தேதி வெளியிடப்பட்டது.

மனித உரிமைகள், சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை ஆகிய 2 பாடங்கள் நீங்கலாக எஞ்சிய 12 பாடங்களுக்கான இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணை கல்லூரி கல்வி இயக்குநரகம் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x