Last Updated : 24 Mar, 2014 09:15 AM

 

Published : 24 Mar 2014 09:15 AM
Last Updated : 24 Mar 2014 09:15 AM

அரசு அலுவலகங்களில் பேஸ்புக், ட்விட்டருக்குத் தடை?

அரசு அலுவலகங்களில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைப் பார்ப்பதற்கு ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்படுவது தொடர்பாக மத்திய தேர்தல் ஆணையத்திடம், தமிழக தேர்தல் துறையினர் விளக்கம் கேட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் பிரசாரத்தை பெருமளவில் மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரத்தை கட்டுப்படுத்துவதற்காக சில நெறிமுறைகளை மத்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

இதுதவிர, இன்டர்நெட் உபயோகிப்பாளர்களும், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை பரவலாக தெரிவித்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில்

அனைத்து அரசு அலுவலகங் களிலும், கணினிமயமாக்கப்பட்டு வரும்நிலையில், அவ்விடங்களில் இன்டர்நெட் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. அதனால், அரசுத்துறை அலுவலகங்களில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் உள்ள விவரங்களை அரசு ஊழியர்கள் பார்க்க முடியும். தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் இதைப் பார்ப்பது, அவர்களை ஒரு சார்பாக செயல்பட வைக்கக்கூடும் என்ற எண்ணத்தில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தலங்களை அரசு அலுவலகங்களில் பார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.

இது பற்றி ஓரிரு தினங்களாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரபரப்பாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் அரசுத் துறை ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு உயர் அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “தேர்தல் துறையினரிடமிருந்து அது போன்ற உத்தரவு இதுவரை வரவில்லை,” என்று தெரிவித்தனர்.

பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு அரசு அலுவலகங்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளதா என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் உயர் அதிகாரியிடம் ஞாயிறன்று கேட்டபோது, “நாங்கள் அது போன்ற உத்தரவு எதனையும் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பவில்லை.

எனினும், மத்திய தேர்தல் ஆணையம் அத்தகைய உத்தரவு ஏதேனும் பிறப்பித்துள்ளதா என்று தெரியவில்லை. இது பற்றிய தகவலை அறிந்ததும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் இது பற்றி விளக்கம் கேட்கப்பட் டுள்ளது. மாலை வரை அவர்களிட மிருந்து பதில் இல்லை. அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் இது பற்றி தெளிவுபடுத்து வோம்,” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x