Published : 05 Apr 2015 12:04 PM
Last Updated : 05 Apr 2015 12:04 PM
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூடுதல் உணவகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என் கின்றனர் பார்வையாளர்கள். இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயற்கையான வனச் சூழலில் 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 144 வகை யான 1,700 விலங்குகள் பராமரிக் கப்படுகின்றன. இந்த பூங்காவுக்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் பார்வையாளர்கள் வருகின்றனர். தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 25 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை வருகின்றனர்.
அங்கு பராமரிக்கப்படும் விலங்குகளின் பாதுகாப்பு கருதி, பூங்காவுக்குள் பார்வையாளர்கள் உணவுப் பண்டங்கள் கொண்டுவர அனுமதி இல்லை.
பூங்காவில் பார்வையாளர் களுக்கான உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார் பில் நடத்தப்படுகிறது. இதன் அரு கில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தின் தின்பண்டங்கள் கூடமும் உள் ளது. இந்த இரண்டும் பூங்கா நுழைவாயிலில் அமைந்துள்ளன. பூங்காவின் உள் பகுதியில் வேறு உணவகம் இல்லை. பார்வையாளர் கள் சாப்பிடுவதானால் மீண்டும் நுழைவாயில் பகுதிக்குதான் வர வேண்டும்.
அதிக தூரம் நடந்து பூங்காவின் உள் பகுதியில் இருக்கும்போது பசித்தால் மீண்டும் நுழைவாயில் பகுதிக்கு வரவேண்டியிருக்கிறது. சாப்பிட்டுவிட்டு மறுபடியும் உள்ளே நடப்பது சிரமமாக இருக்கிறது. பொங்கல் விடுமுறையின்போது, பூங்கா வளாகத்தில் சுற்றுலா வளர்ச் சிக் கழகம் சார்பில் பல இடங்களில் தற்காலிக உணவகங்கள் திறக்கப் படுகின்றன.
அதுபோல, சாதாரண நாட் களிலும் பூங்காவில் ஆங்காங்கே தற்காலிக உணவகங்கள், தின்பண் டங்கள் கூடம் அமைத்தால் வசதி யாக இருக்கும் என்கின்றனர் பார்வை யாளர்கள்.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச் சிக் கழக அதிகாரிகளிடம் கேட்ட தற்கு, ‘‘வண்டலூர் பூங்காவில் கூடுதல் உணவகங்கள் திறப்பதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
பூங்கா நிர்வாகத் துடன் கலந்துபேசி, அவர்களது ஒப்புதலின் பேரில் இடம் தேர்வு செய்து கூடுதல் உணவகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT