Published : 24 Apr 2015 03:29 PM
Last Updated : 24 Apr 2015 03:29 PM
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை மருத்துவத்தை நாடி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யோகாசனம், இயற்கை உணவு மற்றும் இயற்கை மருத்துவம் மீதான மக்களின் நாட்டம், நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் “யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை” பிரிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட் டது.
அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை பிரிவு கடந்த 6 மாதங்களாக செயல்படுகிறது. காலை 7.30 மணியில் இருந்து பகல் 12 மணி வரை சிகிச்சை, ஆலோசனை வழங்கப்படுகிறது.
அங்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் ஆலோசனை குறித்து மருத்துவர் வனிதா கூறும்போது, “பஞ்சபூதங்களை மையமாக கொண்டு சிகிச்சை அளிக்கப்படு கிறது. தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் முறை பிரிவுக்கு கடந்த 4 மாதத்தில் 1,300 பேர் வந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுள்ளனர். அக்குபிரஷர் சிகிச்சையும் அளித்து வருகிறோம்.
அவ்வாறு வந்தவர்களில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்த சோகை, முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, தைராய்டு நோயால் பாதிக் கப்பட்டவர்கள் அதிகம். அவர் களுக்கு தேவையான யோகா சனம், இயற்கை உணவு குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் வலியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆயில் மசாஜ், காந்த முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களும் வந்து ஆலோசனை பெற்று செல்கின்றனர்.
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த உணவை தவிர்க்க வேண்டும், எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கிறோம். வருமுன் காப்போம் முறையில், நோய்கள் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் உணவு குறித்த ஆலோசனை வழங்கப்படுகிறது. வெளியில் தயாரித்து விற்கப்படும் உணவுகளை உட் கொள்ள கூடாது. வீட்டிலேயே தயாரித்து உட்கொள்வது சிறந்தது. கிராமங்களில் விளையும் காய்கனி களை உட்கொள்ள அறிவுறுத்து கிறோம். ரத்த சோகையால் பாதிக் கப்பட்டவர்கள், எங்களது ஆலோ சனைபடி செயல்பட்டால் 2 மாதத் தில் முன்னேற்றம் காணலாம்.
மன அழுத்தம் உள்ளவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. யோகாசன பயிற்சி விரை வில் தொடங்கப்பட உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT