Published : 29 May 2014 09:29 AM
Last Updated : 29 May 2014 09:29 AM

இடதுசாரிகள் ஒன்றாக இணைய தலைவர்கள் விருப்பம்

மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள தாகவும், அதற்கான வாய்ப்புகளை வரவேற்பதாகவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மூத்த தலைவர் ஆர். உமா நாத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் படத் திறப்பு விழா நிகழ்ச்சி கோடம்பாக்கத்தில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு, சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் பிரகாஷ் காரத், மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள் ளிட்ட தலைவர்கள் கலந்து கொண் டனர். உமாநாத்தின் பங்களிப்பு பற்றிய பேசிய ஆர்.நல்லகண்ணு, ‘இந்த நேரத்தில் இரு கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது’ என்று கூறினார்.

அந்த நாளை எதிர்பார்க்கிறோம்

பிரகாஷ் காரத் பேசும்போது, ‘இந்தியாவில் உள்ள அனைத்து இடதுசாரி கட்சிகளின் ஒன்றி ணைப்பை நாங்கள் விரும்புகிறோம். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றாக இணையும் எனில் அதை வரவேற்போம்; அந்நாளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சட்டப்பிரிவு 370ஐ நீக்க பாஜக முயற்சிக்கிறது. இந்தச் சட்டப் பிரிவு மூலமாகத்தான் இந்தியாவோடு ஜம்மு காஷ்மீர் இணைந்தது. அந்தப் பிரிவை நீக்குவது நாட்டுக்கு ஆபத்தாக முடியும். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்பதுதான் பெரும்பான்மையோரின் வேண்டு கோளாக இருந்தது. ஆனால் முந்தைய காங்கிரஸ் ஆட்சி அதை நிராகரித்துவிட்டது.

தற்போது சில்லறை வணிகத் தில் அந்நிய முதலீட்டை நிராகரிப் பதாக மத்திய அரசு அறிவித்துள் ளதை வரவேற்கிறோம்’ என்றார்.

மறைந்த உமாநாத் பற்றிக் கூறும்போது, ‘அவர் தொழிற்சங்கத் தலைவர் மட்டுமல்லாமல், தொழி லாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக, இந்தியாவை சோசலிச நாடாக மாற்றி இங்குள்ள சுரண்டல்கள் அனைத்தையும் களைவதற்கான போராட்டத்தை தொழிலாளி வர்க் கம்தான் தலைமையேற்று நடத்த முடியும் என்று தன் வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x