Published : 15 Apr 2015 09:06 AM
Last Updated : 15 Apr 2015 09:06 AM

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு பயிற்சி

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ, மாணவியரில் 65 பேர் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இப்பயிற்சி மையம் நடத்தவுள்ள மாதிரி ஆளு மைத் தேர்வுக்கு சேர்த்துக்கொள் ளப்படுவர். இம்மையத்தில் படித்தவர்கள் தவிர, இதர பயிற்சி மையத்தில் படித்தவர்களும், எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள்.

இதற்கான விண்ணப்பப் படி வத்தை ஏப்ரல் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மூத்த இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரி களையும், கல்லூரிகளின் பேராசிரியர்களையும் கொண்ட குழு அமைக்கப் பட்டு, மாதிரி ஆளுமைத் தேர்வும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும். மாதிரி ஆளுமைத் தேர்வு ஏப்ரல் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் நடத்தப்படும்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 10 நாட்கள் தங்கி ஆளுமைத் தேர்வில் கலந்து கொள்ள அரசு ஏற்பாடு செய்துள் ளது. ஆளுமைத் தேர்வுக்கு டெல்லி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்கள், இப்பயிற்சி மைய இணையதளத்தில் www.civilservicecoaching.com வெளியிடப்படும். கூடுதல் விவரங் களுக்கு, முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு மையம், சென்னை 28, தொலைபேசி- 044 2462 1475 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x