Published : 02 Apr 2015 09:23 AM
Last Updated : 02 Apr 2015 09:23 AM

அரசு விளையாட்டு மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: ஏப்ரல் 25-ம் தேதி கடைசி நாள்

அரசு விளையாட்டு மையங்களில் சேர பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சம்பு கல்லோலிகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் பல்வேறு ஊர் களில் விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகள் நடத்தப் பட்டு வருகிறது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதன்மை நிலை விளையாட்டு மையங்கள்:

இம்மையங்களில் 6 முதல் 8-ம் வகுப்புகளில் சேர 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விளையாட்டு விடுதிகள்:

இதில் 7, 8, 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சேர ஏப்ரல் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு விளையாட்டு விடுதிகள்:

இதில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் இருந்து ரூ.10 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாளர், முதன்மைநிலை விளையாட்டு மையம், அறை எண்.76, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ, 7401703454 என்ற எண்ணுக்கோ தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x