Published : 05 Apr 2015 10:45 AM
Last Updated : 05 Apr 2015 10:45 AM
திமுக இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணல், சென்னை அன்பகத்தில் வரும் 11-ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த முறைபோல இப்போது படித்த இளைஞர்களுக்கு பொறுப்பு களை வழங்க கட்சித் தலைமை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர பகுதிகளுக்கான அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தேர்வு செய் வதற்கான நேர்காணல், சென்னை அன்பகத்தில் வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடக்க வுள்ளது. தமிழகம் மட்டுமன்றி, புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், அந்தமான், கேரளம், மகாராஷ் டிரம் ஆகிய மாநிலங்களுக்கான இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர் களும் இந்த நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கடந்த முறை இளைஞரணி பொறுப்புக்காக நேர்காணல்கள் நடத்தப்பட்டபோது, படித்தவர் களுக்கும், வாரிசு பின்புலம் இல் லாதவர்களுக்கும் பெருமளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தற்போது அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
திமுகவில் 1980-ல் இளைஞரணி தொடங்கப்பட்டது முதல் இன்று வரை மு.க.ஸ்டாலினே அதன் செய லாளராக பதவி வகித்து வருகிறார். தற்போது கட்சிப் பொருளாளர் பதவியில் இருந்தாலும், தலைவர் பதவி கிடைக்கும் வரை இளைஞ ரணியை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க ஸ்டாலின் திட்டம் வைத்துள்ளார். இதனால்தான் இளைஞரணி நிர்வாகிகள் நிய மனத்தை, நேர்காணல்கள் மூலம் தானே மேற்கொள்கிறார்.
கடந்தமுறை மாவட்டங்களுக்கே சென்று நேர்காணலை நடத்தினார் ஸ்டாலின். இப்போது கட்சியின் அமைப்புரீதியான மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னையிலேயே நடத்தவுள்ளார். எப்படியும் பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பலர், கடந்த ஒரு மாதமாக போட்டி போட்டுக்கொண்டு தங்கள் பகுதியில் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்தி யுள்ளனர். அதற்கான புகைப்படங் களையும் தயார் நிலையில் எடுத்து வைத்துள்ளனர்.
சென்ற முறை படித்த இளைஞர் களுக்கும், வாரிசு பின்புலம் இல் லாதவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவேன் என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்தார். அதன்படியே பொறுப்புகள் வழங் கப்பட்டன. ஆனால், மக்களவை தேர்தல் முடிவுகளும் கட்சி வளர்ச்சிப் பணிகளும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மாவட்ட, ஒன்றிய துணை அமைப்பாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட படித்த இளைஞர்களில் சிலர் வேலை மற்றும் தொழில் நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றதாகவும் இதனால், கட்சிப் பணிகளை அவர்களால் மேற்கொள்ள இயலவில்லை என்றும் தெரிய வந்தது. இனிமேல், படித்த இளைஞர்களை கட்சிப் பொறுப் புக்கு தேர்வு செய்யும்போது, அவர்கள் சொந்த ஊரிலேயே இருந்து கட்சிப் பணியாற்றக் கூடியவரா, கட்சிக்காக செலவு செய்பவரா, பகுதி மக்களிடம் அவருக்கு அறிமுகம் எப்படி, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகளிடம் அவரின் தொடர்பு எப்படி உள்ளது, சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்ட நபருக்கு அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் நெருக்கம் இருக்கிறதா என்பன உள் ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டே பதவிகள் வழங்கப்பட உள்ளன.
திமுகவில் ஏற்கெனவே துணை அமைப்பாளர்களாக பணியாற்றியவர்களின் செயல்பாடுகளையும் ஸ்டாலின் கணக்கில் வைத்துள்ளார். அதில் சிலருக்கு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன. மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையும் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT