Published : 21 May 2014 12:00 PM
Last Updated : 21 May 2014 12:00 PM
எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தெந்த பிளாட் பாரத்தில் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று ஆங்கிலத்தில் மட்டும் ‘போர்டு’ வைத்திருப்பதால் ஆங்கிலம் தெரியாத பயணிகள் அதை படித்து தெரிந்துகொள்ள முடியா மல் சிரமப்படுகின்றனர்.
1908-ம் ஆண்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் திறக்கப் பட்டது. 100 ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து தெற்கு மற்றும் மத்திய மாவட்டங் களுக்கும், கேரளாவுக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப் படுகின்றன. தாம்பரம், செங்கல் பட்டு செல்லும் புறநகர் ரயில்களும் எழும்பூர் வழியாகச் செல்கின்றன. 11 பிளாட்பாரங்களைக் கொண்ட இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து போகின்றனர்.
இவ்வளவு பேர் வந்து செல்லும் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தெந்த பிளாட்பாரங்களில் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்று ஆங்கிலத்தில் மட்டும் ‘போர்டு’ எழுதி நுழைவு வாயிலில் வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
முதலுதவி பெட்டி (4-வது பிளாட்பாரம்), நகரும் படிக்கட்டு (4 மற்றும் 5-வது பிளாட்பாரம்), காத்திருப்போர் அறை (4-வது பிளாட்பாரம்), பொருட்களை பாது காப்பாக வைக்கும் அறை (கிளாக் ரூம்), ஸ்டிரெச்சர், விசாரணை கவுன்ட்டர், வீல் சேர், தனியார் இலவச மருத்துவ சேவை மையம், ரயில் வருகை, புறப்பாடு பற்றிய ஒலிபெருக்கி அறிவிப்பு, புத்தகக் கடை, சைவ, அசைவ உணவகங் கள், பார்க்கிங், தீ அணைப்புக் கருவி, எலக்ட்ரானிக் திரையில் ரயில் வருகை, புறப்பாடு விவரம், பொது தொலைபேசி, குடிநீர் விற்பனை இயந்திரம், வாட்டர் கூலர், நவீன உணவுக்கூடம், கட்ட ணக் கழிப்பிடம், புகார் புத்தகம், வங்கி ஏ.டி.எம். மையம், முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வறை, புட் பிளாசா, மொபைல் சார்ஜ் செய் யும் வசதி, பழக்கடை, குடிநீர் குழாய்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆங்கிலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்கள் இந்த போர்டை பார்த்து எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
இதுபோல, முதல் தளத்தில் கணினி முன்பதிவு மையம் உள்ளது. அங்கே, தட்கல் டிக்கெட் எடுப்பதற்கான வழிமுறைகள், முன் பதிவு டிக்கெட்டை ரத்து செய்தல் மற்றும் கட்டண சலுகைக்கான நிபந்தனைகள் ஆகியனவும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இதைப் படிக்க தெரியாத வர்கள் அங்கிருக்கும் யாரை யாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதிருக் கிறது. ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் சொல்ல பலர் முன்வரு வதில்லை. அதனால் விவரம் தெரிந்துகொள்ள முடியாமல் பயணிகள் தினமும் சிரமப்படு வதைக் காண முடிகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரத்தில் உள்ள 2 பெரிய ரயில் நிலையங் களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில், முன்பதிவு அலுவல கம் உள்ளிட்ட பல தகவல்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் எழுதி வைத்திருக் கிறார்கள். ஆனால், பயணிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை ஆங்கிலத்தில் மட்டும் எழுதி வைத்திருப்பது வேதனையளிக்கிறது என்கின்றனர் பயணிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT