Published : 09 Apr 2015 10:03 AM
Last Updated : 09 Apr 2015 10:03 AM
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆட்டோ சங்கரின் கூட்டாளி பரோலில் வெளியே வந்து, 13 ஆண்டுகள் காத்திருந்த காதலியை நேற்று திருமணம் செய்துகொண்டார்.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஆட்டோ சங்கர். கள்ளச் சாராய விற்பனை மற்றும் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த இவர், தனது 4-வது மனைவியான பெங்களுரைச் சேர்ந்த லலிதா(22), திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களான சுடலை(28), ரவி(27), மந்தை வெளியைச் சேர்ந்த சம்பத்(30), மோகன்(29), கோவிந்தராஜ்(28) ஆகிய 6 பேரை தனது கூட்டாளி களுடன் சேர்ந்து கொலை செய்தார்.
மேல்முறையீடு
1988-ம் ஆண்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆட்டோ சங்கர், அவரது தம்பி மோகன், மைத்துனர் எல்டின், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இறுதியில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோ சங்கர், எல்டின் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது. மற்ற 8 பேரும் ஆயுள் தண்டனை பெற்றனர். இவர்களில் ஆட்டோ மோகன், செல்வராஜ் ஆகிய 2 பேரை தவிர மற்ற அனை வரும் விடுதலையாகிவிட்டனர். இந்நிலையில் பாளையங் கோட்டை சிறையில் அடைக்கப் பட்டுள்ள செல்வராஜுக்கும்(45), திண்டுக்கல் மாவட்டம் யாகப்பன் பட்டியைச் சேர்ந்த செவிலியரான கலா ராணி(37) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். இதற்காக பரோல் விடுமுறை அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்வராஜ் மனு தாக்கல் செய்தார். 35 நாள் விடுமுறை அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாளையங்கோட்டை சிறையி லிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் செல்வராஜ் நேற்று காலை மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.
தமிழ்முறைப்படி திருமணம்
மாட்டுத்தாவணி அருகேயுள்ள ஸ்ரீநிதி ஹோட்டலில் செல்வராஜ், கலா ராணி திருமணம் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் தமிழ்முறைப்படி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT