Published : 15 May 2014 09:17 AM
Last Updated : 15 May 2014 09:17 AM
கூடங்குளம் அணு உலை விபத்து குறித்து அறிவியல்பூர்வ விசாரணை நடத்த வேண்டும் என்று அணுசக்திக்கு எதிரான மக் கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள் ளார். ஆனால், ‘விபத்து எதுவும் நடக்கவில்லை. அணுஉலை பாது காப்பாக உள்ளது’ என்று கூடங் குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், கடந்த 12-ம் தேதி பிற்பகல் 2.56 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கொதி கலனுக்கு நீர் செலுத்தும் கருவி களில் ஏற்பட்ட கோளாறால், உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்தனர். இந்நிலை யில், கோளாறை சரி செய்யும் பணி 2 நாட்களாக நடந்து வந்தது. அப்போது, கொதிகலனுக்கு நீராவி கொண்டு செல்லும் நாசில் திடீரென கசிவு ஏற்பட்டதில், 6 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ராஜன், பால்ராஜ், செந்தில் குமார், ராஜேஷ், வினு மற்றும் மகேஷ் ஆகிய 6 பேரும் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து நடக்கவில்லை
இதற்கிடையே, இந்திய அணு மின் கழகம் சார்பில் கூடங்குளம் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
கூடங்குளம் நிலையத்தில் நீராவி குழாய் உடைப்பு மற்றும் வெடிப்பு போன்ற எந்த விபத்தும் நடக்க வில்லை. அதுபோன்ற தகவல்கள் மற்றும் செய்திகள் தவறானவை. புதன்கிழமை பகல் 12.10 மணிக்கு முதல் அலகில் பராமரிப்பு பணி நடந்தபோது, வால்விலிருந்து கொதி நீர் வழிந்ததில், அணு மின் நிலைய 3 பணியாளர்களும், 3 தற்காலிக பணியாளர்களும் காய மடைந்தனர். அவர்களுக்கு உடனடி யாக முதலுதவி தரப்பட்டு, அணு விஜய் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் நாகர் கோவில் சிறப்பு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். கூடங் குளம் அணுமின் நிலைய முதல் அலகில் கடந்த 5-ம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு 900 மெகாவாட் உற்பத்தி திறன் எட்டப்பட்டது. பின்னர் 12-ம் தேதி பராமரிப்பு பணிக்காக இயக்கம் நிறுத்தப்பட்டது. புதன்கிழமை காலை அணு மின் நிலையம் மீண்டும் இயக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. அணுமின் நிலையத்தை அருகிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த சுமார் 60 பேர் நேரடியாக புதன்கிழமை பார்த்தனர். அணு உலை மிகவும் பத்திரமாக, பாதுகாப்பாக உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உதயகுமார் பேட்டி
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பி.உதயகுமார் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் ஆகியோர் சென்னையில் புதன் கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித் தனர். அவர்கள் கூறியதாவது:
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை. அங்கு தரம் குறைந்த தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்தான், புதன்கிழமை காலையில், கூடங்குளம் நிலையத் தின் முதல் அலகில், நீராவி கொண்டு செல்லும் கருவியில் விபத்து ஏற்பட்டு 6 பேர் காயமடைந் துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தொழில் நுட்ப ரீதியாக அறிவியல் பூர்வ விசாரணை நடத்த வேண்டும்.
கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகளை அமைக்கும் பணிகளை ஆரம்ப கட்டத்திலேயே தமிழக அரசு தடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து, தமிழக அரசியல் கட்சிகள் குறிப் பாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நிலையை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT