Published : 25 Apr 2015 02:17 PM
Last Updated : 25 Apr 2015 02:17 PM

ஆந்திர துப்பாக்கிச் சூடு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆதிவாசிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகக் கூறி, தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர அதிரடிப்படை போலீஸார் கடந்த 7-ம் தேதி சுட்டுக் கொன்றனர். அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் பாலன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் ஆறுமுகம் காணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் மற்றும் ஆந்திர சிறையில் உள்ளவர்கள் குடும்பத் துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், ஆதிவாசிகள் தினத்தை (ஆகஸ்ட் 9-ம் தேதி) அரசு விடுமுறை நாளாக அறிவித்து கலைநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், பழங்குடியினருக்கு தனி அரசு செயலாளரை நியமிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x