Published : 21 Apr 2015 09:16 AM
Last Updated : 21 Apr 2015 09:16 AM
தமிழகத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், சுரங்கத்தை எதிர்நோக்கி தீட்டப்பட்ட 5,000 மெகாவாட் புதிய அனல் மின் உற்பத்தித் திட்டங்கள் மேலும் தாமதமாகும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
புதிய அனல் மின் திட்டங் களுக்குத் தேவைப்படும் நிலக் கரியை வெட்டி எடுத்துக் கொள் வதற்காக, சத்தீஸ்கரில் உள்ள காரே பால்மா சுரங்கத்தை மகாராஷ்டிர அரசுக்கும், தமி ழகத்துக்கும் கூட்டாக ஒதுக்கி 2006-ல் நிலக்கரி சுரங்க அமைச் சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரு மாநிலங் களும் இணைந்து, ‘மஹா தமிழ் கொல்லிரீஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை அமைத்து சுரங்கப் பணிகளைத் தொடங்கவிருந்த நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு புகாரின் கீழ், காரே பால்மா உள்ளிட்ட 214 சுரங்க ஒதுக்கீடுகளையும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது.
அதைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கும், தனியார் நிறு வனங்களுக்கும் நிலக்கரி சுரங்கங் களை ஏலம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மத்திய நிலக்கரி அமைச்சகம் மீண்டும் தொடங்கியது. அதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சுரங்கங்கள் ஒதுக்கீட் டுக்காக விண்ணப்பிக்குமாறு மத் திய அரசு கூறியதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 28-ல் மனு செய்தது. ஒடிசா வில் உள்ள மஹாநதி- மச்ச கட்டா மற்றும் சத்தீஸ்கரில் உள்ள கரே பால்மா (2-வது செக்டர்) ஆகிய இரு நிலக்கரி சுரங்கங்களைக் கோரி தமிழக மின் வாரியம் மனு செய்தது. அதைத்தொடர்ந்து, தமிழக மின் வாரிய அதிகாரிகள், புதுடெல்லி சென்று நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங் கேற்றனர். அப்போது, தமிழகத் துக்கு ஒரு சுரங்கம் உடனடியாக ஒதுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால், நிலக்கரி அமைச்ச கம் வெளியிட்ட தேர்வுப் பட்டிய லில், பெரும்பாலான மாநிலங் களுக்கு சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் களுக்கு மட்டும் ஒதுக்கப்பட வில்லை.
இதுகுறித்து எரிசக்தித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
‘‘தமிழகத்துக்கு ஆரம்பக் கட்ட ஒதுக்கீட்டிலேயே நிலக்கரி சுரங்கம் கிடைத்துவிடும் என எண்ணினோம். அதற்கான அறிவிப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், இம்மாதத் தொடக் கத்தில் தெலங்கானா, கர்நாடகம், மேற்குவங்கம், பிஹார் போன்ற பல்வேறு மாநிலங்களின் மின் வாரியங்களுக்குச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன ஆனால், தமிழகம், ஆந்திரம், ஹரியாணா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப் படவில்லை. தமிழகம் கேட்டிருந்த காரே பால்மா- 2 சுரங்கம், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு மீண்டும் ஏலத்தில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் குவஹாத்தியில் நடைபெற்ற மின் துறை அமைச்சர் கள் மாநாட்டில்கூட மாநில மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன், தமிழகத்துக்கு நிலக்கரி சுரங்கம் உடனடியாக ஒதுக்கப் பட வேண்டும் என்று வலியுறுத் தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2018 - 2019ம் ஆண்டுக்குள் 5,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் நிறு வத் திட்டமிடப்பட்டுள்ளது. அது போன்ற புதிய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை மாநில அரசுகள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங் கள் தாங்களாகவே வெட்டி எடுத்துக் கொள்வதற்காகவே சுரங்கங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
நமக்கு சுரங்கங்கள் ஒதுக் கப்பட்டாலும் அவற்றை உடனடி யாக பயன்படுத்த முடியாது. நிலக்கரியை வெட்டி எடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனத்தை உலகளாவிய டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த நிறுவனம் வெட்டி யெடுக்கும் நிலக்கரியின் அளவுக்கு ஏற்ப, டன்னுக்கு இவ்வளவு என்று தொகை நிர்ணயிக்க வேண்டும்.
ஒடிசாவில் ஒதுக்கீடு?
மேலும், சுரங்கத்தை நிலக்கரி எடுப்பதற்கு ஏற்ப மாற்றுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். நாம் 2018-19 ஆண்டுகளுக் குள் புதிய அனல் மின் நிலையங் களைத் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால், சுரங்கம் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் நேரிடுவதால், அதற் கேற்ப புதிய ஆலைகளின் பணி களும் தாமதமாகும் அபாயம் உள்ளது.
எனினும், ஒடிசாவில் உள்ள ஒரு சுரங்கம் விரைவில் ஒதுக் கப்படும் என வாய்மொழியாக உத்தரவாதம் அளிக்கப்பட் டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT