Published : 21 Apr 2015 02:36 PM
Last Updated : 21 Apr 2015 02:36 PM
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோக- கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கி மேற்கொண்ட ஒப்பந்தத்தை சிப்காட் நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் பணிகள் தொடங்காததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெருந்துறை சிப்காட் வளாகத் தில் கோக-கோலா நிறுவனம் ரூ.500 கோடியில் குளிர்பான தொழிற்சாலை அமைக்க முடிவு செய்தது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு 71.34 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப் படையில் சிப்காட் வழங்கியது. மேலும், நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
குளிர்பான ஆலைக்கு தண்ணீர் வழங்கினால், பெருந் துறை மற்றும் சென்னிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங் களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என் பதால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டக் குழு அமைக்கப்பட்டு கடையடைப்பு, உண்ணா விரதம் உள்ளிட்ட பல்வேறு போராட் டங்களை நடத்தினர்.
அமைச்சர் மழுப்பல்
இதற்கிடையில், ‘கோக-கோலா நிர்வாகம் அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. பொதுமக்க ளின் எதிர்ப்பை மீறி குளிர்பான ஆலை அமையாது’ என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினரும், சுற்றுச் சூழல் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக கோக-கோலா நிறுவனத்துக்கு நிலம் வழங்கியது தொடர்பான ஒப்பந் தத்தை நேற்று முன்தினம் (20-ம் தேதி) அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்ன காரணத்துக்காக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்த தகவல் இடம்பெறவில்லை.
பணிகள் தொடங்கவில்லை
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசியபோது, ‘கோக-கோலா நிறுவனத்துக்கு 2013-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி நிலம் ஒதுக்கப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட 71.34 ஏக்கரைவிட கூடுதலாக நிலம் ஒதுக்கப்பட்டது கண்டறியப்பட்டு, 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி சரியான அளவு நிலம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 71.34 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு ஒரு ரூபாய் வீதம் குத்தகைக்கு வழங்குதல், மேம்பாட்டு பணிக்காக ஏக்கருக்கு ரூ.25 லட்சத்தை சிப்காட் டுக்கு வழங்குதல், நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட ஷரத்துகள் அடங்கிய ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி நிலம் ஒதுக்கீடு செய்த 6 மாதங்களில் பணியை தொடங்க வேண்டும். 30 மாதங்களில் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற ஷரத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதன்படி கோக-கோலா நிறுவனம் பணியை தொடங் காததால், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப் பட்டது.
ஆலை நிர்வாகம் ஏப்ரல் 20-ம் தேதி பதில் அளித்தது. உரிய விளக் கத்தை அவர்கள் தராததாலும், ஒப்பந்தத்தை பின்பற்றாததாலும் நிலம் வழங்குவதற்கான ஒப்பந்தம் அதே நாளில் (20-ம் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
விவசாயிகள் சங்கம் வரவேற்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
ஈரோடு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஹிந்துஸ்தான் கோக-கோலா நிறுவனம் குளிர்பான தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு சுமார் 71 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கி ஒப்பந்தம் செய்திருக்கிறது.இந்த தொழிற்சாலை நாள்தோறும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் என்பதால் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், தமிழக அரசு கோக-கோலா நிறுவனத்துக் கான நில ஒப்பந்தம் ரத்து செய்யப் படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்போது அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஏப்ரல் 23-ம் தேதி நடக்க விருந்த இத்திட்டத்தின் நில ஒப்பந்த நகல் எரிப்பு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோக - கோலா நிறுவனம் விளக்கம்
விதிகளை சரியாக பின்பற்றாததால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோக-கோலா குளிர்பான நிறுவனம் தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டுமானப் பணிகளை தொடங்க இருந்த நிலையில் வெளியில் இருந்து வந்த நெருக்கடிகளால் தொடங்க முடியவில்லை.
தண்ணீர் ஒப்பந்தம், தண்ணீரை ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு கொண்டு வருதல், மின்சார இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான உரிய தொகை செலுத்தப்பட்ட பிறகும் கிடைக்கவில்லை. இதனால், உரிய காலத்தில் கட்டுமான பணிகளை தொடங்கவோ திட்டத்தை தொடரவோ முடியவில்லை. எனவே, இத்திட்டத்துக்காக நாங்கள் தமிழக அரசுக்கு செலுத்திய தொகை முழுவதையும் திரும்பி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT