Published : 11 Apr 2015 10:04 AM
Last Updated : 11 Apr 2015 10:04 AM

கூவம் ஆற்றை புதுப்பிக்க ஒப்பந்தப் புள்ளி: ரூ.604 கோடி பணிகளுக்கு பசுமை தீர்ப்பாயத்தில் விளக்கம்

கூவம் ஆற்றை புதுப்பிக்க அரசு சார்பில் ரூ.604 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கள் கோரப்பட்டிருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் கூவம் ஆறு புதுப்பிப்பு அறக் கட்டளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

“சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை வீட்டுக் கழிவுகள் மற்றும் தொழிற்சாலை களின் ரசாயன கழிவுகளால் மாசுபட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகின் றன. அந்த ஆறுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்று பி.டேவிட் வில் சன் தொடர்ந்த வழக்கு விசாரிக் கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே அளித்த பதில் மனுவில் “கூவம் ஆற்றை புதுப் பிக்க கடந்த 2013-ம் ஆண்டில் கூவம் ஆறு புதுப்பிப்பு அறக் கட்டளை நிறுவப்பட்டுள்ளது. குறுகிய கால திட்டம் (3 ஆண்டு கள்), மித கால திட்டம் (12 ஆண்டுகள் வரை), நீண்ட கால திட்டம் (25 ஆண்டுகள் வரை) என வகைப்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப் பினர் நீதிபதி எம்.சொக்கலிங் கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகி யோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூவம் ஆறு புதுப் பிப்பு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

கூவம் ஆற்றை புதுப்பிக்க குறுகிய கால திட்டத்தின் கீழ் 60 இனங்களுக்கு அரசு கடந்த ஜனவரியில் ரூ.604 கோடியே 77 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தது. இது தொடர்பாக பொதுப் பணித்துறை, சென்னை மாநக ராட்சி, சென்னை குடிநீர் வாரி யம், குடிசை மாற்று வாரியம் ஆகியவை ஒப்பந்தப் புள்ளிகள் கோரியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பந்தப் புள்ளிகள் முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் அமர்வின் உறுப்பி னர்கள் “இந்த அறிக்கையில் திருப்தி இல்லை. கடந்த 2013-ம் ஆண்டில் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. குறுகிய கால திட்டத்துக்கான 3 ஆண்டு களில், இதுவரை கடந்துவிட்ட நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், குறுகிய கால திட்டத்தில் இடம்பெற்றுள்ள பணிகளின் விவரங்கள் ஆகி யவை குறித்து கூவம் ஆறு புதுப்பிப்பு அறக்கட்டளை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 8 பிரதிவாதிகளும் அடுத்த விசாரணையின்போது விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

அறிக்கை தாக்கல் செய்யா தோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்று உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x