Published : 14 Apr 2015 11:05 AM
Last Updated : 14 Apr 2015 11:05 AM

தனியார் நிலத்தில் கூலிக்கு மரம் வெட்ட ஆந்திர மாநிலம் சென்றவர் மாயம்: மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட் டத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் கூலிக்கு மரம் வெட்டுவதற்காகச் சென்று, வீடு திரும்பாத தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று, நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு கொடுத்தார்.

மேலும், இதுதொடர்பாக ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தபோது அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகப்பன் மனைவி அஞ்சலை, ஆட் சியரிடம் கொடுத்த மனு விவரம்:

எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்குச் சொந்தமாக- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரத்தில் உள்ள விவசாய நிலத்தில், மரம் வெட்டும் பணிக்காக கடந்த மாதம் 3-ம் தேதி எனது கணவர் நாகப்பன் உட்பட 8 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பணியின்போது தகராறு நேரிட்டதில், எனது கணவரை சேகர் தாக்கி, தனியாக இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு, எனது கணவர் நாகப்பனைத் தவிர, மரம் வெட்டச் சென்ற மற்ற அனைவரும் கடந்த மாதம் 8-ம் தேதியே வீடு திரும்பிவிட்டனர். எனது கணவர் குறித்து எந்தத் தகவலும் தெரிய வில்லை.

இதுதொடர்பாக ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தபோது, அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். எனவே, எனது மனு மீது விரைவாக நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் அஞ்சலை குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஒரகடம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி கூறும் போது, ‘சேகர், பாலசமுத்திரத்தில் மாந்தோப்பு வைத்துள்ளதாகவும், அங்கு பம்புசெட் கட்டுமானப் பணிக்காகவே ஆட்களை அழைத் துச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. மரம் வெட்டுவதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. அனைத்துச் சம்பவங்களும் ஆந்திர மாநிலத் தில் நடைபெற்றுள்ளதால், சம்பந் தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆந்திர போலீ ஸாரும் நாகப்பன் காணாமல் போனது குறித்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x