Published : 24 Apr 2015 09:12 AM
Last Updated : 24 Apr 2015 09:12 AM
இந்திய பச்சை மிளகாய்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப் பட்டிருப்பதால், அங்கு வசிக்கும் தென்னிந்தியர்கள் தவித்து வருகின்றனர்.
தென்னிந்தியர்களின் உண வில் மசாலா பொருட்களுக்கும், காரத்துக்கும் என்றும் தனியிடம் உண்டு. அதில் பச்சை மிளகாய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்மவர்கள் வெளிநாடுகளுக்கு போனாலும் இந்திய மசாலா பொருட்கள், மற்றும் காய்கறி களை விற்பனை செய்யும் கடை களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாங்கி சமைக்கின்ற னர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் சில பகுதிகளில், குறிப்பாக நியூஜெர்சி போன்ற நகரங்களில் பச்சை மிளகாய் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பல்பொருள் விற்பனை அங்காடிகளில், “அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதால், இனி பச்சை மிளகாய் விற்பனை செய்யப்படமாட்டாது,” என்ற வாசகம் அடங்கிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியர்கள் தவித்து வருகின்றனர்.
முன்னதாக, இந்தியாவில் இருந்து பச்சை மிளகாய்களை இறக்குமதி செய்வதற்கு சவூதி அரேபிய அரசும் கடந்த ஆண்டு தடை விதித்தது குறிப்பிடத் தக்கது. “இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பச்சை மிளகாய்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், ஏற்றுமதிக்கு முன்பு அவற்றை ஆய்வுக்கு உட் படுத்த வேண்டும் என்ற கோரிக் கையை இந்திய ஏற்றுமதி யாளர்கள் புறக்கணித்ததாலும் சவூதி அரேபிய அரசு இதற்கு தடை விதித்ததாக கூறப்படுகிறது. சவூதி அரேபியாவைத் தொடர்ந்து, அமெரிக்காவிலும் இதே காரணத்துக்காக இந்திய பச்சை மிளகாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.
இது தொடர்பாக நியூஜெர்சி யில் வசிக்கும் கவிதா ராமசாமி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “மெக்சிக்கோ மற்றும் தாய்லாந்து பச்சை மிளகாய்கள் கிடைத்தாலும், இந்திய பச்சை மிளகாய்க்குரிய காரம், மணம் அலாதியானது. அதற்கு வேறு எதுவும் ஈடாகாது. தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.280-க்கு விற்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கொச்சியில் உள்ள இந்திய வாசனைப் பொருட்கள் வாரிய ஏற்றுமதிச் சான்று பதிவு அதிகாரி அஜீதா கூறும்போது, “அமெரிக்க தூதரகத்தில் இருந்து பச்சை மிளகாய்க்கான தடை பற்றிய தகவல் இதுவரை எங்களுக்கு வரவில்லை. எனினும் வாரம் ஒரு முறை நாங்கள் இதுபோன்ற தகவல்களை நாடு முழுவதிலு மிருந்து பெற்று அவற்றைத் தொகுப்பது வழக்கம். அப்போது இது பற்றி தெரியவரக்கூடும்,” என்று தெரிவித்தார். இது தொடர் பாக புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் மற்றும் பதப் படுத்தப்பட்ட உணவுப்பொருட் கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
பச்சை மிளகாய் அதிக அளவில் ஏற்றுமதியாகும் குஜராத் மாநிலத்தின் முன்னணி ஏற்றுமதி நிறுவனமான ஸ்மிட் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ராஜேஷ் கல்பா இதுபற்றி கூறும்போது, பச்சை மிளகாய் தடை பற்றிய தகவலைக் கேள்விப் பட்டதாகவும், அமெரிக்காவில் உள்ள இறக்குமதியாளரைத் தொடர்பு கொள்ள முயன்றுவருவ தாகவும் தெரிவித்தார்.
நியூஜெர்சியில் உள்ள இந்திய மசாலா மற்றும் காய்கறி வகைகளை விற்பனை செய்யும் ஒரு கடையில், பச்சை மிளகாய் தடை தொடர்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT