Published : 03 Apr 2015 10:41 AM
Last Updated : 03 Apr 2015 10:41 AM
தோல் முட்டையிடும் நாட்டுக் கோழி, நள்ளிரவில் கூவும் சேவல், வெள்ளிக்கிழமையில் முதல் முட்டையிடும் கோழி ஆகியவை வீட்டுக்கு ஆகாது என்று, அவற்றை அடித்துச் சாப்பிடும் பழக்கம் இந்த நவீன காலத்திலும் நகரங்கள், கிராமங்களில் தொடர்கிறது.
தற்போது நாட்டுக்கோழிகளுக் கும், அவற்றின் முட்டைகளுக்கும் சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப் பதால், நாட்டுக்கோழி வளர்ப்பு பண் ணைத் தொழிலாக மேற்கொள்ளப் படுகிறது.
ஆனாலும், கோழி வளர்ப்பில் கிராம மக்கள், விவசாயிகளிடையே இன்றும் சில விநோத நம்பிக்கைகள் தொடர்கின்றன. அதாவது, ‘நள்ளிர வி ல் கூவும் சேவல்களையும், தோல் முட்டையிடும் கோழிகளையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது, வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலாக முட்டையிடும் கோழி வீட்டுக்கு ஆகாது’ என்று அவற்றை உடனடியாக அடித்துச் சாப்பிட்டு விடுகின்றனர்.
இதுகுறித்து பழநி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் வி.ராஜேந்திரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
‘‘கோழிகள் தோல் முட்டை இடு வது இயற்கை. ஆனால், தோல் முட்டையிடும் கோழியை வீட்டுக்கு ஆகாது என்று கூறி, அதை உடனடி யாக விற்று விடுவர் அல்லது சமைத்து விடுவர்.
இதேபோல, வெள்ளிக்கிழமை யன்று முதல் முட்டையிடும் கோழியையும், நள்ளிரவில் கூவும் சேவலையும் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பு வதில்லை. சேவல் நள்ளிரவு கூவுவது, தவறான எண்ணத்தில் ஏற்பட்ட பழக்கவழக்கம்.
முட்டையின் ஓடு கால்சியம் என்ற சுண்ணாம்பு சத்தால் ஆனது. தீவனத்தில் கால்சியம் (சுண்ணாம்பு) குறையும்போதோ அல்லது பற்றாக்குறை ஏற்படும் போதோ, ஓடு பலமில்லாத முட்டை களை கோழிகள் இடும். இந்த முட்டைகள் கால்சியம் குறைவால் எளிதில் உடைந்துவிடும். இதுதான் அறிவியல்பூர்வ உண்மை.
உடைந்த இந்த முட்டைகளை சில கோழிகள் கொத்தி உண்ண ஆரம்பிக்கும்.
நாளடைவில் இந்த முட்டை ருசிக்கு அந்தக் கோழிகள் பழக்கப்பட்டவுடன், தினமும் நல்ல முட்டைகளையும் கொத்தி சாப்பிடத் தொடங்கும். இதனால், முட்டை உற்பத்தி பாதிக்கும்.
இதுபோன்று தோல் முட்டையிடுவதைத் தவிர்க்க, தீவனத்தில் தகுந்த அளவில் சுண்ணாம்பு சத்தை சேர்த்து கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும்.
கடற்கரைகளில் கிடைக்கும் சிப்பி, கிளிஞ்சல்களை அரைத்து தீவனத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.
கடைகளில் விற்கப்படும் கால்சியம் பவுடரையும் கொடுக்கலாம். சுண்ணாம்பு கரைக்கப்பட்ட தெளிவு தண்ணீரை கொடுக்கலாம்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகள் நீண்ட நாள் அடைகாப்பதால் முட்டையிடவில்லை என்று கருதி, அதைத் தெளியவைக்க (முட்டையிட வைப்பதற்கு) முயற்சி செய்வர்.
அதில் ஒன்றுதான் கோழி களின் மூக்கில் இறகை குத்திவிடு வது. அதேபோல, அடைகாக்கும் குணம் கோழிகளுக்கு தெளிய வில்லை என்றால், அக்கோழி களை சில விவசாயிகள் நீரில் அமிழ்த்துவார்கள்.
இப்படியெல்லாம் கோழிகளை கொடுமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மூக்கில் இறகை வைப்பதால் கோழியின் அடைகாக்கும் குணத்தை மாற்ற முடியாது. எனவே, விநோத நம்பிக்கைகளைக் கைவிட்டு நாட்டுக்கோழிகளுக்கு சத்துள்ள தீவனத்தை கொடுத்து பராமரித்தாலே அவை முட்டை யிடும்.
முறையான பயிற்சியுடன் நாட்டுக்கோழி வளர்ப்பு- விற்பனையில் ஈடுபட்டால் அதிக லாபம் பெற முடியும்’’ என்றார் ராஜேந்திரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT