Published : 02 Apr 2015 08:28 AM
Last Updated : 02 Apr 2015 08:28 AM

பேச்சுவார்த்தைக்கு கேரள அரசு திடீர் முட்டுக்கட்டை: வாளையாரில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் தொடர்கிறது

வாளையாறு சோதனைச்சாவடி விவகாரத்தில் திட்டமிட்டபடி நேற்று முதல் சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை தொடங்கினர். அதனையடுத்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் இன்று நடக்க இருந்த பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் பண்டிகைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

15 ஆண்டு கோரிக்கை

கோவை அருகே உள்ள கேரள எல்லை வாளையாறு வழியே தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் செல்கின்றன. இங்குள்ள கேரள வணிக வரித் துறை சோதனைச் சாவடி சரக்கு மற்றும் ஆவணங்களை சரிபார்ப் பதில் உள்ள கெடுபிடிகளை சரிப் படுத்தக்கோரி 15 ஆண்டுகளாக லாரி உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

20 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விடியோ கான்பிரன்ஸில் பேசிய கேரள முதல்வர் உம்மன்சாண்டி, லாரி உரிமையாளர்களின் 8 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படாததால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் சரக்கு லாரிகள் கேரளத்துக்குள் செல்லாது என அறிவித்து, நேற்று முதல் இப்போராட்டம் தொடங்கியது.

இதனால், லாரிகள் கோவை பகுதிகளில் நீலம்பூர் எல் அண்ட் டி சாலைகள் தொடங்கி மதுக்கரை, எட்டிமடை, க.க.சாவடி, நவக்கரை என வாளையாறு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சோதனைச் சாவடியிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் தேங்கி நின்றன.

இந்த நிலையில், உம்மன் சாண்டி தலைமையில் இன்று மதியம் திருவனந்தபுரத்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங் கேற்க வருமாறு அழைக்கப் பட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று மதியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அங்கு அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பண்டிகைகள் காரணமாக பேச்சுவார்த்தை தள்ளிவைக் கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரணச் சாவடி

இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் டிரான்ஸ் போர்ட் சுங்க வரிக் குழு தலைவரும், கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலை வரும், தென்னிந்திய மோட்டார் காங்கிரஸ் பொதுச் செயலாளரு மான சண்முகப்பா நமது செய்தியாளரிடம் கூறியதாவது:

இது சோதனைச் சாவடியே அல்ல; மரணச்சாவடி. லாரி உரிமையாளர்களையும், ஓட்டுநர் களையும் பாடாய் படுத்து கிறார்கள். இந்தியாவில் 1,253 சோதனைச்சாவடிகள் உள்ளன, அங்கெல்லாம் பிரச்சினையில்லை.

இவ்வளவு முக்கியப் பிரச் சினைக்குத் தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு அழைத்துவிட்டு பண்டிகை காரணம்காட்டி தள்ளிவைப்பது என்பது, மக்கள் பிரச்சினையில் இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். இதனால், காலவரம்பின்றி போராட்டம் மேலும் தொடரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x