Published : 21 May 2014 11:26 PM Last Updated : 21 May 2014 11:26 PM
சென்னை, டெல்லி, கிழக்கு இந்திய பகுதிகளில் லேசான நில அதிர்வு
சென்னை, டெல்லி மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் புதன்கிழமை இரவு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், மக்களிடையே அச்சம் நிலவியது.
வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் சென்னையின் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, போரூர், திருவெல்லிக்கேணி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
சில வீடுகளில் உள்ள பொருட்கள் அசைந்ததால், மக்களிடையே அச்சம் நிலவியது.
டெல்லி, ராஞ்சி, கொல்கத்தா மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
ஆந்திரத்தின் ஸ்ரீகாகுலம், விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும் இரவு 10 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
WRITE A COMMENT