Published : 13 Apr 2015 09:14 AM
Last Updated : 13 Apr 2015 09:14 AM

அண்ணாநகர், பாடி ரயில் நிலையங்களில் இருந்து மீண்டும் மின்சார ரயில்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

அண்ணாநகர் மற்றும் பாடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு மீண்டும் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் மற் றும் பாடியில் கடந்த 2003-ம் ஆண்டு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற் காக பல கோடி ரூபாய் செல வில் ரயில் நிலையங்கள் அமைக் கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாண வர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் என்று பல்லாயிரக்கணக்கானோர் அந்த ரயில்களை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு பாடி மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியபோது, அதற்கு தூண் கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 2 ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. அதன்பிறகு இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட வில்லை. இப்பகுதியில் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருப்பதால் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பாதையில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கே.பி.எச்.முகம்மது முஸ்தபா என் பவர் கூறும்போது, “ரயில் போக்குவரத்து இல்லாததால் சிதிலமடைந்திருக்கும் அண்ணா நகர் ரயில் நிலையம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகி இருக்கிறது. அண்ணா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து விட்டது. பொது போக்குவரத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அண்ணாநகர் வழியாக மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கினால் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’என்றார்.

அப்பகுதியை சேர்ந்த ஜெ.ஜெயப்பிரகாஷ் கூறும்போது, “இங்குள்ள மக்களுக்கு போதிய போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்படுகிறார்கள். அண்ணாநகர் ரயில் நிலையத்தை சரிசெய்து மின்சார ரயில்களை இயக்கினால், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

வசந்தி என்பவர் கூறும்போது, “சுமார் 8 வருடங்களுக்கு முன்பு அண்ணாநகரில் இருந்து கடற்கரைக்கு தினமும் 5 முறை மின்சார ரயில் இயக்கப்பட்டது. ஆனால், அப்போது குறை வான மக்கள் பயன்படுத்திய தால் மின்சார ரயில் நிறுத் தப்பட்டதாக கூறுகிறார்கள். இப்போது, மின்சார ரயிலில் பயணம் செய்ய 4 கி.மீ செல்ல வேண்டியுள்ளது ’’என்றார்.

ஆர்.பரத் கூறும்போது, “பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக பாடி, அண்ணாநகர் பகுதியில் தண்டவாளங்களை சீரமைத்து ரயில் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x