Published : 07 Apr 2015 10:35 AM
Last Updated : 07 Apr 2015 10:35 AM

இல.கணேசன், எச்.ராஜாவுக்கு பாஜகவில் கூடுதல் பொறுப்பு

இல.கணேசன், எச்.ராஜா, மோகன் ராஜுலு ஆகியோருக்கு பாஜக வில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக பாஜக அலுவலகச் செயலாளர் சர்வோத்தமன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் பெங்களூருவில் ஏப்ரல் 2, 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கட்சியில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களுக்கான உறுப்பினர்களை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார். இதில் தமிழக பாஜக நிர்வாகிகளும் இடம் பெற்றுள்ளனர்.

பாஜக பயிற்சி முகாம் குழு உறுப்பினராக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனும், ‘செல்வ மகளைப் படிக்க வைப்போம், செல்வ மகளைப் பேணுவோம்’ குழுவின் உறுப்பினராக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், அலுவலக நவீனமயமாக்கல் குழு உறுப்பினராக மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் மோகன்ராஜுலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x