Published : 02 Apr 2015 07:51 AM
Last Updated : 02 Apr 2015 07:51 AM

161 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் - ஏப்ரல் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல்: 15-ம் தேதி வாக்குப்பதிவு

தமிழகத்தில் உள்ள 161 கூட்டுறவுச் சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 15-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 9-ம் தேதி நடைபெறுகிறது என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் ம.ரா.மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் புதி தாக தொடங்கப்பட்ட 150 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங் கங்கள் உள்ளன.

கூட்டுறவுச் சங்கங் களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 3 கூட்டுறவுச் சங்கங்கள் செயல் படுகின்றன. கைத்தறி மற்றும் துணி நூல் இயக்குநரின் கட்டுப்பாட்டில் 4 கூட்டுறவுச் சங்கங்கள், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை ஆணையர் கட்டுப்பாட்டில் 2 கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் 2 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த 161 கூட்டுறவுச் சங்கங் களில் 1,741 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக் கவும், இவர்களில் இருந்து தலா 161 தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்கவும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 1,741 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 315 இடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவரும், 476 இடங்களுக்கு பெண்களும், 950 இடங்களுக்கு பொதுப் பிரிவினரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கிடையாது.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வரும் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தாக்கல் செய்யலாம். அன்று மாலை 5.30 மணிக்குள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 5 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 15-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பதிவான வாக்குகளை எண்ணும் பணி மறுநாள் 16-ம் தேதி காலை 10 மணிக் குத் தொடங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர் தேர்தல்

தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வரும் 16-ம் தேதி தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இத்தேர்தல் நடைபெற வுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் குறித்து அந்தந்த மாவட்டம் தொடர்பு டைய தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வை யாளர்களான கூட்டுறவுச் சங்கங் களின் இணைப் பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x