Published : 28 May 2014 09:44 AM
Last Updated : 28 May 2014 09:44 AM
கரகாட்ட கலைச் சேவையில் லட்சக்கணக்கில் பணம் பார்த்த மோகனாம்பாள் வேலூர் மாவட்டத் தில் பெரிய கரகாட்ட குழுவை நடத்திவந்தார். ஆந்திர மாநிலம் வரை இவரது கலைச்சேவை பிரபலம் என தெரியவந்துள்ளது. வயோதிகம் காரணமாக ஆட முடியாவிட்டாலும், லட்சங்களை கோடியாக உயர்த்துவதில் பல தடைகளையும் உடைத்தெறிந்தி ருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வேலூர் வசந்தபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மோகனாம்பாள் (50). கரகாட்ட கலைஞர். இவர் காட்பாடி தாராபடவேடு கோவிந்த ராஜ முதலி தெருவைச் சேர்ந்த ஜமுனா என்பவரது வீட்டில் குடியி ருந்தார். காட்பாடி வீட்டில் ஞாயிற் றுக்கிழமை இரவு போலீஸார் நடத் திய திடீர் சோதனையில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயி ரத்து 500 ரொக்கப் பணம், 73 சவ ரன் தங்க நகை, 81 கிராம் வெள்ளி, வெற்றுப் பத்திரத்தில் கடன் வாங் கியவர்களின் கையெழுத்து, ரூ.6.60 லட்சம் பணம் வங்கியில் டெபாசிட் செய்த ரசீது உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மோகனாம்பாளின் சகோதரி மகன் சரவணன் செம்மரக் கடத் தலில் சேர்த்த பணத்தை மோகனாம் பாள் வீட்டில் பதுக்கி வைத்துள் ளாரா என்கிற சந்தேகமும் போலீ ஸாருக்கு எழுந்துள்ளது.
பணம் பறிமுதல் செய்யப்பட் டதை அடுத்து தலைமறைவாக உள்ள மோகனாம்பாள் குறித்து பெயர் கூற விரும்பாத கரகாட் டக் கலைஞர்கள் சிலர் தெரிவித்த தாவது: ‘‘ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக மோகனாம்பாவால் கரகாட்டம் ஆட முடியவில்லை. இதனால், ஆட்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். திருவிழாக் காலங்களில் ஒரு நாள் ஆட்டத்திற்கு 1 லட்சம் ரூபாய் வரை புக் செய்வார்.ஆட்டக்காரர் களுக்கு ஏற்ப கூலி வழங்குவதில் மோகனாம்பாள் கில்லாடி. புரோகிரா முக்கு எவ்வளவு பேசினார். எவ்வளவு பணம் வாங்கினார் என்பது எல்லாம் எங்களுக்கு சொல்ல மாட்டார். ஆடினால் வாக்கு தவ றாமல் காசு கொடுத்துவிடுவார்.
வேலூர் மாவட்டத்திலேயே மோகனாம்பாள் பெரிய ஆட்டக் காரி. மோகனாம்பாள் கையில் ’எப்போதும் பணம் புழங் கும். எனக்கு தெரிந்து 20 வருஷத் துக்கும் மேலாக வட்டிக்கு பணம் கொடுக்கிறார். வட்டிக்கு பணம் கேட்டால் இல்லை என சொல்ல மாட்டார்.
வீட்டு பத்திரங்கள் அடமானம் வைத்தும் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கேட்ட பணத்தை கொடுப்பார். வட்டியும் அவருக்கு சரியான நேரத்தில் கொடுத்துவிடவேண்டும். 2 ரூபாய் வட்டி, 3 ரூபாய் வட் டிக்கு பணம் கொடுப்பார். நன்கு பழக்கமானவர்கள் என்றால் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப் பார். நானே எனது வீட்டை அடமானம் வைத்து 4 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். எனக்கு ரூ.1.50 வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால், அவரிடம் இவ்வளவு பணம் இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை’’ என்றனர்.
மோகனாம்பாளை நன்கு தெரிந்தவர்கள் இவ்வாறு கூறும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் ரூ.4 கோடி பணத்திற்கு விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT