Last Updated : 18 Apr, 2015 09:33 AM

 

Published : 18 Apr 2015 09:33 AM
Last Updated : 18 Apr 2015 09:33 AM

ஒரு நிமிடத்துக்குள் முடியும் திமுக இளைஞரணி நேர்காணல்கள்: தேர்தல் நிதி வசூலிக்கப்படுவதால் தொண்டர்கள் அதிருப்தி

திமுக இளைஞரணி நேர் காணல்களில் ஒருவருக்கு ஒரு நிமிடத்துக்குள்ளாகவே நேர்காணல் முடிக்கப்படுவதா லும், தேர்தல் நிதி வசூலிக் கப்படுவதாலும் திமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திமுகவில் இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர் காணல்கள் கடந்த 11-ம் தேதி முதல் நடந்து வருகின்றன. தமிழகத்துக்கான நேர்காணல் கள் முடிவடைந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கான நேர்காணல்கள் தொடர்ந்து நடக்கவுள்ளன. நேர்காணலுக் காக வந்தவர்களில் பெரும் பாலானவர்களுக்கு ஒரு நிமிடத் துக்குள்ளாகவே நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டதாலும், அவர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டதாலும் பலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் சிலர் கூறியதாவது:

நேர்காணல் மூலம் இளைஞரணி நிர்வாகிகளை நியமிப்பதால் திறமையின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று நம்பினோம். இதற்காக கட்சிக்காக சிறை சென்ற விவரம், செலவு செய்த விவரம் போன்றவற்றை கோப்புகளாக எடுத்துச் சென்றோம்.

ஒரே நாளில் 5 முதல் 6 மாவட்டங்கள் வரை நேர்காணல் நடத்தப்படுவதால் ஒரு நபரிடம் ஒரு நிமிடத்துக்கு குறைவாகவே நேர்காணல் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் கொண்டு செல்கிற விவரங்களை முழுமையாக பார்ப்பதற்கு இளைஞரணிச் செயலாளரால் முடியவில்லை. உடனுக்குடனே எங்களுடைய கோப்புகள் மூடப்படுகின்றன. பதவிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்றாலும், எங்களது கருத்துகளை கூற முடியாத நிலையும் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. குடும்பத்தில் யாரேனும் பதவியில் உள்ளார்களா? நீங் கள் என்ன பதவியில் உள் ளீர்கள்? இளைஞரணி பதவி கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விகள் தான் நேர்காணலின்போது பெரும்பாலும் கேட்கப்பட்டது.

இதுமட்டுமன்றி நேர்காண லுக்கு வருவோரிடம் தேர்தல் நிதியும் வசூலிக்கப்படுகிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நிதி வசூலிக்கும் போது, நேர்காணலுக்காக வந்த இடத்திலும் தேர்தல் நிதி கேட்பது எப்படி நியாயமாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நிதி வசூலிக்கும் போது, நேர்காணலுக்காக வந்த இடத்திலும் தேர்தல் நிதி கேட்பது எப்படி நியாயமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x