Published : 12 May 2014 07:48 AM
Last Updated : 12 May 2014 07:48 AM

2-ம் கட்ட பேச்சு: மீனவர்கள், அதிகாரிகள் கொழும்பு புறப்பட்டனர்

இலங்கை மற்றும் தமிழக மீனவர் கள் பங்கேற்கும் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை கொழும்பில் இன்று நடக் கிறது. இதற்காக தமிழக, புதுவை மீனவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் குழு இலங்கை புறப்பட்டுச் சென்றது.

பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடிப்பது தொடர்பாக இந்திய, இலங்கை மீனவர்களிடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குவதும், பிடித்துச் சென்று சிறையிலடைப்பதும் தொடர்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு மீனவர்களிடையே கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், இருநாட்டு மீனவர்களும் இடையூறின்றி தொழிலை செய் வது, இரட்டை மடி வலைகளை இருதரப்பிலும் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற சில முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஏற்கெனவே இரு முறை தேதி குறிப்பிடப்பட்டு, தள்ளிப்போனது. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பேச்சுவார்த்தையில் பங்கேற் பதற்காக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கே.சிவஞானம், ஜி.வீர முத்து, தஞ்சை மாவட்டம் பி.ராஜ மாணிக்கம், புதுக்கோட்டை மாவட் டம் குட்டியாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் ஜி.ஜேசுராஜா, காரைக் கால் எம்.இளங்கோ உள்ளிட்ட 19 மீனவர் பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் மீன்வளத்துறை செயலாளர் ச.விஜயகுமார், இயக்குநர் ச.முனியநாதன், கூடுதல் இயக்குநர் ரெங்கராஜு மற்றும் மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சுசித்ரா துரை, துணைச் செயலாளர் மயாங் ஜோஷி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை இரவு விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.

இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் இலங்கை மீன்வளத் துறை தலைமை இயக்குநர் நிமல் ஹெட்டியராச்சி, மீன்வளத்துறை இயக்குநர் எஸ்.சுபசிங்கே உள்ளிட்ட அதிகாரிகளும் அந்நாட்டு மீனவ பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x