Published : 22 Apr 2015 09:56 AM
Last Updated : 22 Apr 2015 09:56 AM

கூவம் ஆறு சுத்திகரிப்புக்கு ரூ.42.74 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்பந்தம் கோரியது பொதுப்பணித்துறை

கூவம் ஆறு மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றில் வானகரம் முதல் சேத்துப்பட்டு வரையிலான பகுதியில் சுத்திகரிப்புப் பணி மற்றும் கிளைக் கால்வாய் (பேபி கெனால்) அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ. 42.74 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து கலக்கும் கழிவுநீரால் கூவம் ஆறு மாசடைந்து காணப்படுகிறது. கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.500 கோடி மதிப்பில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல்படுத்த சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தலைமையில் சென்னை மாநகராட்சி, பொதுப்பணித் துறையின் நீர் வளப் பிரிவு, சென்னை குடிநீர் வாரியம் உள்ளிட்டவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.

தற்போது கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றின் ஒரு பகுதியில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளவும் பேபி கெனால் அமைத்து கழிவுநீரை திருப்பி விடவும் முடிவெடுத்து 3 பிரிவுகளாக இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டு பாலம் முதல் பாடிக்குப்பம் வரையும், பாடிக்குப்பத்தில் இருந்து வானகரம் வரையும், வானகரத்தில் இருந்து 5000 மீட்டர் தொலைவுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.42.74 கோடிக்கு திட்டமிடப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் நேற்று கோரப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறையின் நீர்வளப் பிரிவு ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது.

கூவம் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றின் ஒரு பகுதியில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளவும் பேபி கெனால் அமைத்து கழிவுநீரை திருப்பி விடவும் முடிவெடுத்து 3 பிரிவுகளாக இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x