Published : 29 May 2014 10:39 AM
Last Updated : 29 May 2014 10:39 AM

ஜூன் 2-ம் தேதி முதல் எம்பிஏ, எம்சிஏ விண்ணப்பங்கள்

அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2014 - 15 கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைகள் தொடங்கவுள் ளன. எனவே, தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் மற்றும் கலைக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக வட்டார மையங் கள், சென்னை பல்கலைக்கழகம், பெரியார் பல் கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தனியார் பொறியியற் கல்லூரிகள் மற்றும் கலைக்கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ பயிலுவதற்கான விண்ணப்பங்கள் வருகிற ஜுன் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 43 கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப விநியோகம் நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x