Last Updated : 08 Apr, 2015 10:10 AM

 

Published : 08 Apr 2015 10:10 AM
Last Updated : 08 Apr 2015 10:10 AM

முடிவுக்கு வந்தது வாளையாறு சோதனைச் சாவடி பிரச்சினை: 5 நாள் வேலை நிறுத்தத்தால் ரூ. 2,500 கோடி பொருட்கள் தேக்கம் - ஒரே நாளில் 12 கவுன்ட்டர்கள் திறப்பு

தமிழக - கேரள எல்லையில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் குறைவான கவுன்ட்டர்கள் மட்டுமே இருப்பதால் அந்த சோதனைச் சாவடியை கடந்து செல்ல சரக்கு வாகனங்களுக்கு பல மணி நேரம் காலதாமதம் ஏற்படுகிறது. மூன்று கவுன்ட்டர்கள் மட்டுமே உள்ள இந்த சோதனைச் சாவடியில் 10 கவுன்ட்டர்கள் வரை அமைக்க வேண்டும்.

லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பிடம், தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என கேரள அரசிடம் கோரிக்கை வைத்து லாரி உரிமை யாளர் சங்கங்கள், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கின.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர கேரள மாநில முதல் வர் உம்மன்சாண்டி, நிதி அமைச்சர் மாணி, வணிகவரித் துறை ஆணை யர், போக்குவரத்துத்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் லாரி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் இரவு பேச்சு வார்த்தை நடத்தினர். திருவனந்த புரத்தில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், லாரி உரிமையாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள் வதாக கேரள முதல்வர் அறிவித் தார். இதையடுத்து, போராட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்வதாக லாரி உரிமையாளர் சங்கங்கள் அறிவித்தன.

இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸின் டோல் கமிட்டிக் குழு தலைவர் ஜி.ஆர்.சண் முகப்பா, `தி இந்து’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:

‘‘எங்களது அனைத்து கோரிக் கைகளையும் ஏற்றுக்கொள்வதாக கேரள அரசு உறுதி அளித்துள்ளது. முக்கியமாக, 3 கவுன்ட்டர்களை 14 கவுன்ட்டர்களாக 3 நாட்களுக் குள் அதிகப்படுத்தி தருவதாகத் தெரிவித்தனர். உறுதி அளித்தது போல் 12 கவுன்ட்டர்கள் வரை ஒரே நாளுக்குள் அதிகப்படுத்தி யுள்ளனர். இதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. மேலும், ரூ.12 லட்சம் செலவில் குடிநீர் வசதி, அரசு சார்பில் எடை மேடை வசதி செய்து தருவதாகவும் அறிவித்துள்ளனர். சோதனைச் சாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை ஏற்றுக்கொண்ட அவர்கள் விரைந்து 14 கேமிராக்கள் வரை கட்டமைக்கப்படும், ரூ. 2 கோடியில் 300 வண்டிகள் நிறுத்தும் அளவுக்கு நிலம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

வாக்குறுதிகளை நிறை வேற்றும் பொருட்டு கமிட்டி அமைப் பதாகவும், அந்த கமிட்டியில் லாரி உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கேரள அரசு பிரதிநிதி கள் இருப்பார்கள் எனவும், 3 மாதத்துக்கு ஒருமுறை கூடி கலந்துபேசிக் கொள்ள தீர்மானிக் கப்பட்டுள்ளது.

கவுன்ட்டர்கள் உடனடியாக அதிகப்படுத்தி உள்ளதால் லாரிகள் வரிசையில் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது. கடந்த 5 நாட்கள் நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ரூ. 2,500 கோடி அளவுக்கு பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. கேரள அரசுக்கான வரி இழப்பு மட்டும் ரூ. 600 கோடிக்கும் அதிகம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x