Published : 13 Apr 2015 11:20 AM
Last Updated : 13 Apr 2015 11:20 AM

தமிழர்கள் 20 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: ஆந்திர போலீஸிடம் பாமக உண்மை அறியும் குழு விசாரணை

தமிழர்கள் 20 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர காவல் துறை யிடம் பாமக உண்மை அறியும் குழு விசாரணை நடத்தியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திராவின் திருப்பதி வனப் பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் ஆந்திர காவல்துறை யினரால் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக பாமக வழக் கறிஞர் அணித்தலைவர் க.பாலு தலைமையிலான உண்மை கண் டறியும் குழுவினர் இன்று (நேற்று) திருப்பதியில் ஆந்திர காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேரின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு சந்திரகிரி காவல் நிலையத்துக்கு குழு சென்றது. கொல்லப்பட்ட சசிக்குமாரின் மனைவி முனியம்மாள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. முனியம்மாளின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அதற்கான ரசீதை கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன்பின்னர், சம்பவ இடத்தை பார்வையிடுவதற்காக செல்ல முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் அங்கு செல்லக் கூடாது என்றும் தடுத்தனர். அதையேற்று, சம்பவ இடத்துக்கு செல்லும் திட்டத்தை பாமக உண்மையறியும் குழு தற்காலிகமாக ஒத்தி வைத்தது.

இதையடுத்து, திருப்பதி நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் கோபிநாத் ஜாட்டி, திருப்பதி மேற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசலு, திருப்பதி கிழக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிஷங்கர் ரெட்டி, சந்திரகிரி காவல் நிலைய அதிகாரி சிவப்பிரசாத் ஆகியோரிடமும், மாவட்ட வனத் துறை அதிகாரி சீனிவாசனிடமும் குழு விசாரணை நடத்தியது.

கொல்லப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங் களை அவர்களின் குடும்பத் தினருக்கு குழுவினர் பெற்றுத் தந்தனர்.

கொல்லப்பட்டோரின் உடல்களை மறு உடற்கூறு ஆய்வு செய்ய ஆணையிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காக சென்னை திரும்பும் உண்மை கண்டறியும் குழு, மீண்டும் ஆந்திரம் சென்று விசாரணையைத் தொடரும். மேலும் பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த பிறகு விசாரணை அறிக்கையை பாமக தலைமையிடம் இக்குழு ஒப்படைக்கும். அதனடிப்படையில் தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையை பாமக தலைமையிடம் இக்குழு ஒப்படைக்கும். அதனடிப்படையில் தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை கட்சி மேற்கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x