Published : 02 Apr 2015 07:53 AM
Last Updated : 02 Apr 2015 07:53 AM

சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தும் பட்ஜெட்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

அனைவருக்கும் நலம் பயக்கும் வகையில், சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசின் பட்ஜெட் அமைந்திருப் பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதத் துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கூறிய தாவது:

மாநிலத்தின் மொத்த வருவாய் 2010-11-ல் ரூ.70,187.63 கோடியாக இருந்தது. இது, 2015-16-ம் ஆண் டுக்கு ரூ.1,42,681.33 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. விவ சாயம், தொழில் போன்ற துறை களை ஊக்குவித்தும் கட்டமைப்பை மேம்படுத்தியும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, மனிதவளம் சார்ந்த கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, எண்ணற்ற நலத்திட்டங்கள் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது என 3 முறைகளிலும் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு, அனைவருக்கும் நலம் பயக்கும் சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதியை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியுள்ளதை பாராட்டியுள்ளோம். அதேநேரத்தில் மானியங்களின் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதை சுட்டிக்காட்டி, இம்மாற்றங்களால் கூடுதல் நிதி ஆதாரங்கள் மாநிலங் களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை குறிப்பிட்டுள்ளோம்.

மத்திய அரசை குறைசொல்லும் நோக்கம் இல்லை. 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப் படையில் ஏற்பட்டுள்ள மாற்றங் களால் தமிழகம் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளது என்றுதான் தெரிவித்து உள்ளோம். பாரம்பரிய நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேளாங் கண்ணி, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை சேர்த்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளோம்.

நிர்வாகத் தவறு இல்லை

எந்தவொரு அரசும் துல்லியமாக செலவுகளைக் கணக்கிட்டு ஒதுக்கீடு செய்து, சேமிப்பே ஏற்படாமல் முழுமையாக செலவு செய்துவிட முடியாது. எல்லா அரசு நிர்வாகத்திலும் சில இனங்களில் நிதி திரும்ப ஒப்புவிப்பு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால் நிர்வாகமே சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அந்த நிதி அதே திட்டங்களுக்கு அடுத்த ஆண்டிலே செலவிடப்படும். இதில் நிர்வாக தவறு ஏற்பட வாய்ப்பில்லை.

2012-ம் ஆண்டு தலைமை நிதி கணக்காயரின் அறிக் கையில் 248 தலைப்புகளில் ரூ.11,571.34 கோடி சரண்டர் செய்யப்பட்டதாகவும், அதில், 74 தலைப்புகளில் ரூ.4,359.78 கோடி முழுமையாக திரும்ப ஒப்புவிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக உறுப்பினர் துரைமுருகன் குறிப்பிட்டார்.

2006-07 நிதியாண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5,401.32 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்புவிப்பு செய்யப்பட்டுள்ளது. 2007-08ல் ரூ.4,766.83 கோடி யும், 2008-09ல் ரூ.5,708.31 கோடியும், 2009-10ல் ரூ.6,767.93 கோடியும் திமுக ஆட்சியில் செலவிடப்படாமல் திரும்ப ஒப்புவிப்பு செய்யப்பட்டுள்ளது. 2010-11-ம் ஆண்டிலும் ரூ.4,505.91 கோடி திரும்ப ஒப்புவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x