Published : 27 May 2014 09:23 AM
Last Updated : 27 May 2014 09:23 AM
கணவர் உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தை அறிந்து மனம் வருந்தி மனைவி இறக்க, அவரது உடலை பார்த்து கணவரும் உயிரி ழந்த சம்பவம் புதுவையில் நிகழ்ந் துள்ளது.
புதுவை அரியாங்குப்பம் ராதா கிருஷ்ணநகர் கம்பன் வீதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (75). ஏஎப்டி மில்லில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வள்ளி (70). இவர்களுக்கு திருமணமாகி 40 ஆண்டுகளாகிறது. மகன், இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகனுடன் இவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வள்ளி உயிரிழந்தார். மனைவியின் உடலை பார்த்து அழுதபடி இருந்த ஏகாம்பரம் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். மனம் ஒத்து வாழ்ந்த இருவரும் மரணத்திலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது குறித்து அவர்களுடைய உறவினர்கள் கூறுகையில், ஏகாம்பரத்துக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் சேர்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டது. அத்து டன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஒரு கால் எடுக்கப்பட்டது. தனது கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனம் வருந் திய நிலையில் வள்ளி இருந்துள் ளார். வள்ளிக்கும் திடீரென்று உடல்நிலை மோசமடைந் தது. கடலூரில் உள்ள மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு ஞாயிறு இரவு இறந்தார். வள்ளி யின் உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டதை பார்த்து அழுத படி இருந்த ஏகாம்பரமும் திங்கள் கிழமை காலை இறந்து விட்டார் என்றனர்.
மரணத்திலும் இணைபிரியாத தம்பதியை ஒரே பாடையில் வைத்து அரியாங்குப்பம் இடுகாட் டுக்கு எடுத்து சென்று அவர்களின் உடல்களை அருகருகே புதைத்த னர். மனைவி, கணவன் அடுத்த தடுத்து உயிரிழந்தையடுத்து அப் பகுதி மக்கள் ஏராளமானோர் சென்று இறுதி அஞ்சலியை தம்ப திக்கு செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT