Published : 22 Apr 2015 09:53 AM
Last Updated : 22 Apr 2015 09:53 AM

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வங்கிகளுக்கு எஸ்பி அறிவுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம், இருங் காட்டுகோட்டை சிப்காட் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்களின் கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது நேற்று காலை தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் வலியுறுத்தும் பாது காப்பு அம்சங்களை நிறைவேற்ற வங்கி நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட எஸ்பி அறிவுறுத்தினார்.

இருங்காட்டுகோட்டை சிப்காட் பகுதியில் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையம் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இந்த நிலையில், நேற்று காலை ஏடிஎம் மையத்தை திறப்பதற்காக காவலாளி சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு ஏடிஎம் மைய ஷட்டர் திறந்துகிடந்தது.

தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வந்து பார்த்தபோது, முதல் நாள் இரவு ஏடிஎம் மையத் தில் கொள்ளை முயற்சி நடை பெற்றது தெரிய வந்தது. இயந் திரத்தில் பணம் வைக்கப்படும் பகுதியை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் போலீ ஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடரும் முயற்சிகள்

ஏடிஎம் மையங்களை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.

கூடுவாஞ்சேரி, திருப்போரூர் பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தின் பண அறையை கொள்ளையர்கள் டெட்டனேட்டர் குச்சிகளை வெடிக் கச் செய்து உடைக்க முயன்றனர். அந்த முயற்சி தோல்வியடைந்தது.

மாமல்லபுரம் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலாளியைக் கொன்று கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதையடுத்து, போலீஸார் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணி களை தீவிரப்படுத்தியதால், ஏடிஎம் கொள்ளை முயற்சி குறைந் திருந்தது.

கடந்த மார்ச் மாதம் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரின் மாதிரி உருவப் படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதுவரை அந்த நபரைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், இருங்காட்டுகோட்டை ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த 2 சம்பவங்களிலும் இயந்திரத்தில் பணம் வைக்கப்படும் அறையை உடைக்க முடியாததால் பல லட்ச ரூபாய் தப்பியது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி விஜயகுமார் கூறிய தாவது: ஏடிஎம் மையங்களை கண் காணிக்கும் பணிகளில் போலீஸார் மெத்தனமாக செயல்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. இரவு நேரங்களில் ஏடிஎம் மையங்களை கண்காணிக்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு ரோந்து போலீஸாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகங் களும் போலீஸாரின் அறிவுரைகள் மற்றும் போலீஸார் வலியுறுத்தும் பாதுகாப்பு அம்சங்களை ஏடிஎம் மையத்தில் முறையாக ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x