Published : 21 Apr 2015 11:16 AM
Last Updated : 21 Apr 2015 11:16 AM

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு

அட்சய திரிதியை தினமான இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் சிறிதளவு குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2537-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.48 குறைந்து ஒரு சவரன் ரூ.20,296-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.27130-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.36505-க்கு விற்கப்படுகிறது.

இன்று அட்சய திரிதியை ஒட்டி நகை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x