Published : 25 Apr 2015 07:30 AM
Last Updated : 25 Apr 2015 07:30 AM

தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மின்னணு ஆளுகைத் திட்டத்துக்காக கிடைத்தது

மின்னணு ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2014-15ம் ஆண்டுக்கான இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது தமிழகத்துக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சிறப் பான நிர்வாகம் ஊராட்சி கணக்குகளை கண்காணிப்பதற் கான கணக்கீட்டு மென்பொருள் (பிரியாசாப்ட்), உள்ளாட்சி அமைப்புகள் விவர தொகுப்பு (எல்ஜிடி), ஊராட்சிகளுக்கான தேசிய வலைத்தளம், தேசிய அளவிலான ஊராட்சி சொத்துகள் விவரத் தொகுப்பு மற்றும் ஊராட்சி அளவில் திட்டமிடலுக்கான பிளாண் பிளஸ் ஆகிய மின்னணு ஆளுகை மென் பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த மின் ஆளுகை திட்டங்களைச் செயல் படுத்த கணினி, பிரிண்டர் மற் றும் இணையதள இணைப்பு ஆகியவற்றுக்கு ரூ. 79.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து தின மாநாடு

மின் ஆளுகை திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங் களுக்கு மத்திய அரசின் சார்பில் இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இதன்படி 2014-15ம் ஆண்டுக்கான விருது மற்றும் ரூ. 20 லட்சம் ரொக்கப் பரிசை தமிழக அரசுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த விருதை நேற்று டெல்லியில் நடந்த பஞ் சாயத்து தின மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பெற்றுக் கொண்டார்.

தமிழகத்துக்கு விருது

ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் திட்ட செயலாக்கம், நிர்வாகம், நிதி மற்றும் அதிகார பரவலாக்கம் ஆகியவற்றை ஊக்கு விக்கும் பொருட்டு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதையும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கி உள்ளது.

கடந்த 2014-15ம் ஆண்டுக் கான இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 6 ஊராட்சிகள் , 2 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி தேர்வு செய்யப் பட்டுள்ளன.

மாவட்ட ஊராட்சிக்கான விருதை நெல்லை மாவட்ட ஊராட்சித் தலைவர் பி. நாராயண பெருமாள், ஊராட்சி ஒன்றியத்துக்கான விருதை கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேன்மொழி, தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மதுமதி விஜயகுமார், கிராம ஊராட்சிகளுக்கான விருதை திருச்சி முடிகண்டம் ஊராட்சித் தலைவர் வேலுசாமி, திருப்பூர் கொசவம்பாளையம் ஊராட்சித் தலைவர் எம். கண்ணன், கோவை குருடம்பாளையம் ஊராட்சித் தலைவர் டி.ரவி, நீலகிரி பர்லி யார் ஊராட்சித் தலைவர் எஸ். கலைச்செல்வன், தூத்துக்குடி மேலபுதுக்குடி ஊராட்சித் தலைவர் கே. இவான்ஸ் பிரைட், விருதுநகர் அத்திப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜி.வி. கோவிந்தராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஊராட்சிக்கு ரூ. 30 லட்சம், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ. 20 லட்சம், கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது.

ராஷ்ட்ரியகவுரவ் கிராம சபா விருது

கிராம சபையை சிறப்பாக நடத் தும் கிராம ஊராட்சிகளை ஊக்கு விக்கும் பொருட்டு, ராஷ்ட்ரிய கவுரவ் கிராம சபா விருது சிறந்த ஊராட்சிக்கு வழங்கப்படுகிறது. 2014-15ம் ஆண்டு இந்த விருதுக்கு நீலகிரி மாவட்டம், குன்னுார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பெரஹட்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவர் ராஜேஷ்வரி தேவதாஸ் விருதை பெற்றுக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x