Published : 17 Apr 2015 09:01 AM
Last Updated : 17 Apr 2015 09:01 AM
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.திலகர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்பு களில் சேர இடம் கிடைக்காத மாண வர்கள் கடைசியாக கால்நடை மருத்துவ படிப்பில் சேருகின்ற நிலை முற்றிலும் மாறி தற்போது மாணவ-மாணவிகள் தங்களின் முதல் விருப்பமாகவே கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். கால்நடை மருத் துவ பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதுடன் உதவித்தொகையுடன் உயர் கல்வி வாய்ப்பும், தனியார் வேலை வாய்ப்புகளும் தற்போது மிகுந்து உள்ளன.
தமிழகத்தில், சென்னை வேப்பேரி, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பு (பி.வி.எஸ்சி.) உள்ளது. மொத்தம் 280 இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, பி.டெக். (உணவு தொழில்நுட்பம்) பி.டெக். (பால்வள தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகள் சென்னையில் தனியாக நடத்தப்படுகின்றன.
கடந்த ஆண்டு வரையிலும் மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் விண்ணப்பமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம் இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பு களுக்கும், பி.டெக். படிப்புகளுக் கும் ஆன்லைனிலேயே மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைனில் ‘நெட் பேங்கிங்’ மூலம் செலுத்திவிடலாம்.
விண்ணப்பங்களை சிறுதவறு கூட இல்லாமல் பரிசீலிக்கவும், மாணவர்கள் தெரிவிக்கும் விவ ரங்களை விரைவாக ஆராய் வதற்கும் ஆன்லைன்முறை பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஆன்லைனில் விண் ணப்பிக்கும்போது மாணவர் களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதுகுறித்து விளக்கம் பெற தனி ‘ஹெல்ப்லைன்’ எண் விண்ணப்ப அறிவிக்கையில் தெரிவிக்கப்படும்.
இளங்கலை பட்டப் படிப்பு களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு மே 2-வது அல்லது 3-வது வாரத்தில் வெளியிடப்படும்.
கலந்தாய்வு ஜூலையில் நடத்தப்பட்டு முதல் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும்.
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு (கவுன்சலிங்) தற்போது சென்னையில்தான் நடத்தப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்ப முறையை தொடர்ந்து அடுத்த கட்டமாக மாணவர்களின் நலன் கருதி, கலந்தாய்வையும் ஆன்லைனில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
பல்கலைக்கழக ஆராய்ச் சிப் பணிகளை பொருத்தவரை யில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்), மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை, மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் ரூ.613 கோடி மதிப்பில் 209 விதமான ஆராய்ச்சிப்பணிகள் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரு கின்றன.
மேலும், கால்நடை தீவன உற்பத்தி மேம்பாட்டு திட்டத்துக் காக தமிழக அரசு ரூ.6.9 கோடி வழங்கியிருக்கிறது. இதில், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் சுபா புல், கோ-1 உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் திலகர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT