Published : 11 Apr 2015 10:08 AM
Last Updated : 11 Apr 2015 10:08 AM

ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம்: அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்

ஆந்திராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை நேற்று உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

ஆந்திராவில் செம்மரக் கடத் தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை செம் மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டி வட்டம் சித்தேரி மலை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அரசநத்தம், ஆலமரத்து வளவு, கருக்கம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 7 பேர் இறந்தனர். அவர்களுக்கான தமிழக அரசின் உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மலை கிராமங்களுக்கு நேரில் சென்று அரசு வழங்கிய நிவாரணத் தொகைக்கான காசோலைகளை பாதிக்கப்பட்டோரின் குடும்பத் தாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், அதிமுக சார்பில் அறிவிக் கப்பட்ட தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளையும் உரியவர் களிடம் அமைச்சர் பழனியப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சியர் விவேகா னந்தன், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.அன்பழ கன், மாநில பட்டுவாரியத் தலைவர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நாகராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x