Published : 23 Apr 2015 09:06 AM
Last Updated : 23 Apr 2015 09:06 AM

காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் அருகே கல்குவாரி கழிவுகளால் பாழாகும் விளைநிலம்: குடும்பத்துடன் விவசாயி தர்ணா

திருமுக்கூடல் அருகே விவசாய நிலத்தின் நடுவே செயல்படும் தனியார் கல்குவாரியால் விளை நிலத்தில் பாறை கழிவுகள் தேங்கிநிற்பதாக புகார் தெரிவித்து விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திரு முக்கூடல் அடுத்த பழவேலி கிராமத்தில் விவசாய நிலத்தின் நடுவே கடந்த 17 மாதங்களாக தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வெடித்து சிதறும் பாறை துகள்கள் மற்றும் சிறிய அளவிலான கற்கள், அருகில் உள்ள விளைநிலத்தில் விழுந்து தேங்கி கிடக்கின்றன. இதனால், அப்பகுதி விவசாயிகள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரியின் கழிவுகள் விளை நிலத்தில் விழு வதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவ சாயி, கல்குவாரி அருகே உள்ள

தனக்கு சொந்தமான விளை நிலத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து, அவர் கூறிய தாவது: கல்குவாரி கழிவுகளால் எனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலமும் பாதிப்படைந்துள்ளது. இதனால், கடந்த 6 மாதங்களாக விவசாயம் செய்ய முடியவில்லை. மாலை 5 மணிக்கு மேல் வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை உடைக்கின்றனர். இதனால், கால்நடைகள் காயமடை கின்றன. இங்குள்ள விவசாயிகள் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவிப் பதால், குவாரி நிர்வாகம் அருகில் உள்ள விளை நிலங்களை வலுகட்டாயமாக குத்தகைக்கு பெற்றுள்ளது.

எனது நிலத்தையும் மாதம் ரூ.6 ஆயிரத்துக்கு குத்தகைக்கு விடுமாறு கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் ஒப்புக்கொள்ள வில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித் தேன். இதனால், கல்குவாரி நிர்வாகத்தினர் என்னை மிரட்டு கின்றனர். கோட்டாட்சியர் மூலம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது ஆட்சியர் உறுதி அளித்தார்.

ஆனால், இதுவரை அரசு அதி காரிகள் யாரும் இங்கு வர வில்லை. விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாததால், விளைநிலத்தை விட்டு செல்ல மனமில்லை. எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தரவேண்டும், குவாரியின் கழிவுகள் விளை நிலத்தில் தேங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி குடும் பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

சாலவாக்கம் போலீஸாரும், போராட்டத்தை கை விடும்படி மிரட்டுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் சிவருத்ரய்யா விடம் கேட்டபோது, கல்குவாரி குறித்து விசாரிக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. தர்ணா போராட் டம் இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை. எனினும், உத்திர மேரூர் வட்டாட்சியரை நேரில் சென்று விசாரிக்கும்படி உத்தரவிட் டுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x