Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM
பெரம்பலூர் தொகுதிக்கான திமுக வேட்பாளர் தேர்வில், முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேருவுக்கும் ஆ.ராசாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி களில் 4 திருச்சி மாவட் டத்துக்குள் வருகின்றன. எனவே, திருச்சி மாவட்டச் செயலாளரான நேரு பெரம்பலூர் தொகுதியிலும், தன்னுடைய ஆதரவாளரை நிறுத்தி கொடி நாட்ட நினைக்கிறார். இவருக்குப் போட்டியாக மண் ணின் மைந்தர் ஆ.ராசாவும் தன் னுடைய ஆதரவாளரை இங்கு நிறுத்த ஆர்வம் காட்டி வருகிறார்.
பெரம்பலூர் தொகுதியில் முத்தரையர் அதிகம் என்பதால், அந்த சமூகத்தைச் சேர்ந்த மருதைராஜை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது அதிமுக. அதேபோல் திமுக சார்பிலும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த தொட்டியம் ஒன்றியச் செயலாளர் சீமானூர் பிரபுவை நேரு சிபாரிசு செய்கிறாராம். இவருக்குப் போட்டியாக, முன்னாள் அமைச்சர் செல்வராஜை ஆ.ராசா சிபாரிசு செய்வதாகச் சொல்லப்படுகிறது. செல்வராஜும் நேருவும் எதிரும் புதிருமாக நிற்கும் சிங்கங்கள் என்பதால் ராசாவின் சாய்ஸை நேரு விரும்பவில்லை என்கிறார்கள். ஒருவேளை, நேருவின் ஒப்புதல் இல்லாமல் தனது செல்வாக்கை வைத்து செல்வராஜை ராசா வேட்பாளராக்கினால், தொகுதிக் குள் மர்மமான உள் வேலைகள் உச்சத்தில் நடக்கும் என்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் மத்தியில் இன்னும் இரண்டு பேரும் பெரம்பலூரை குறிவைப்பதாகச் சொல்லப்படுகிறது. பெரம் பலூரைப் பிறப்பிடமாகக் கொண்ட பத்திரிகை ஆசிரியர் ஒரு வர், தனது வகுப்புத் தோழரும் பஞ்சாயத்துத் தலைவரு மான ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்காக திமுக தலைமையிடம் அழுத்தம் கொடுப் பதாகச் சொல்லப்படுகிறது.
அரவாக்குறிச்சி எம்.எல்.ஏ-வான கரூர் கே.சி.பழனிச்சாமி தனது மகன் சிவராமனுக்காக பெரம்பலூர் தொகுதியைப் பெற முயற்சிக்கிறாராம். இந்த இருவர் தரப்பிலும் ராசாவையும் நேருவையும் சமாளிப்பதற்கான வேலைகளும் நடக்கிறதாம். பெரம்பலூர் வேட்பாளர்-நேருவின் ஆதரவாளரா… ராசாவின் ஆதரவாளரா? என்பதை ஆவலோடு எதிர்நோக்கிக்கொண்டு இருக்கிறது பெரம்பலூர் தொகுதி திமுக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT