Published : 06 May 2014 08:50 AM
Last Updated : 06 May 2014 08:50 AM

மின் தொகுப்பு பாதையில் கோளாறால் வல்லூரில் உற்பத்தி பாதிப்பு: சென்னையில் அறிவிக்கப்படாத மின் வெட்டு

மின் தொகுப்பு பாதையில் ஏற்பட்ட திடீர் கோளாறால், வல்லூர் மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் திங்கள்கிழமை அறிவிக்கப்படாத நேரத்தில் 2 மணி நேரம் மின் வெட்டு அமலானது.

தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையம், நீர் மின் நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் மின் தொகுப்பில் கிடைக்கும் மின்சார அளவை பொறுத்து தினமும் மின் வெட்டை அமல்படுத்துவதும், நிறுத்துவதும் தொடர்கிறது.

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக வானிலை மாற்றத் தால், காற்றாலைகளின் மின் உற்பத்தி பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் வானிலை சீரானதும் மீண்டும் இயக்கப் பட்டது.

ஆனாலும் காற்று வீசும் வேகம் குறைந்ததால், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காற்றாலை மின் உற்பத்தி குறைவாகவே இருந்தது. அதே நேரம் மழையால் மின்சாரத் தேவை குறைந்ததால், மிகக் குறைந்த அளவு மின்வெட்டை மட்டுமே அமல்படுத்தி மின் வாரிய அதிகாரிகள் நிலைமையை சமாளித்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் பல இடங்களில் ஏற்பட்ட கனமழையால், திருவள் ளூர் மாவட்டம் வழியே வரும் மின் தொகுப்பு பாதையில் திடீர் கோளாறு ஏற்பட்டு, மின்சாரம் அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது.

இதனால் வல்லூர் மின் நிலையத்தில் உற்பத்தி தடைபட்டது. 2 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் வீதம் 1,000 மெகாவாட் உற்பத்தி திங்கள் அதிகாலை 5 மணிக்கு நிறுத்தப் பட்டது.

அப்போது காற்றாலையிலும் வெறும் 7 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத நேரத்தில் மின் வெட்டு அமலானது.

இதையடுத்து பகல் 12 மணிக்கு வல்லூர் இரண்டாம் அலகில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி யதையடுத்து, மின் வெட்டு தளர்த்தப்பட்டது. இதேபோல், வல்லூர் நிலைய முதல் அலகில் மாலையில் மின் உற்பத்தி துவங்கியது.

கடந்த 2 நாட்களாக, தமிழக மின் வாரியத்திற்கு மின்சாரம் வழங்கும் நிலையங்கள் மூலம் 11,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியான நிலையில் திங்கள்கிழமை 10,500 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. ஆனாலும் மழை மற்றும் குளிர்ந்த வானிலையால் மின்சாரத் தேவை குறைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x