Published : 25 Apr 2015 08:13 AM
Last Updated : 25 Apr 2015 08:13 AM

தினம் ஒரு கைக்கடிகாரம் கட்டி அசத்திவரும் மோகனசுந்தரம்: 5 ஆயிரம் ரகங்கள் கைவசம்

தினம் ஒரு தினுசு ஆடை உடுத்து பவர்கள் உண்டு. ஆனால், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மோகனசுந்தரம் தினம் ஒரு கைக் கடிகாரம் அணிந்து அசத்துகிறார். இவரிடம் உள்ள கைக் கடிகாரங்களின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டும் என்பது வியக்க வைக்கும் இன்னொரு செய்தி.

எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத் திருக்கும் மோகனசுந்தரத்திடம் இத்தனை கைக் கடிகாரங்கள் எப்படி சேர்ந்தன? அதுகுறித்து அவரே சொல்கிறார். “ஆறாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் நூற் றுக்கு நூறு எடுத்தால் Henri Sandoz வாட்ச் வாங்கித் தருவதாக அப்பா சொன்னார். அந்தக் காலத்துல மிக பிரபலமான வாட்ச் அது. வாத்தியார்கள்தான் கட்டுவார்கள். சொன்னபடியே மார்க் எடுத்து அப்பாவிடம் அந்த வாட்ச்சை பரிசா வாங்கினேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அதோட மதிப்பு அறுபது ரூபாய். நான் வாட்ச் கட்டிட்டுப் போனதை பார்த்து சக மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால் வாத்தியார்கள், ‘நீ வாட்ச் கட்டிக்கிட்டு வரக் கூடாது’னு தடை போட்டார்கள். இருந்தாலும், அந்த வாட்சை பத்திரமா பாதுகாத்து வைத்தேன். அப்படித் தொடங்கிய பழக்கம்தான் இப்போது என்னை ஐயாயிரம் வாட்ச்சுகளுக்கு சொந்தக்காரனாக்கி உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு படித்தபோது மார்வடி கடையில் நாற்பது அம்பது ரூபாய்க்கு நானே விதவித மான வாட்ச்சுகளை வாங்கி அணிய ஆரம்பித்தேன். என்னிடம் பாத்திரங்கள் பாலீஷ் போடுற மெஷின் உள்ளதால் பழைய வாட்ச்சுகளைகூட பாலீஷ் போட்டு புதுசு மாதிரி ஜொலிக்க வைச்சுரு வேன். படிக்கிற வயசுல தொடங் குன பழக்கம் அப்பாவுக்குப் பின்னாடி கம்பெனியை கவனிக்க ஆரம்பிச்ச பின்பும் நிற்கல. 1961-ல ஹெச்.எம்.டி. வாட்ச் கம்பெனி தொடங்கினார்கள். இப்போது ஹெச்.எம்.டி. வாட்ச்சுகள் வருவ தி ல்லை. ஆனா, அந்த கம்பெனியின் ஆரம்ப காலத்து வாட்ச்சிலிருந்து கடைசி தயாரிப்பு வரைக்கும் 300 மாடல்கள் என்னிடம் உள்ளன.

பழைய வாட்ச்சுகள் எங்கே யாவது விற்பனைக்கு இருக் கிறதை கேள்விப்பட்டா உடனே புறப்பட்டுவிடுவேன். மும்பைக் கும் புனேக்கும் அடிக்கடி போயி ருக்கேன். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய தயாரிப்பான ரோலக்ஸ் வாட்ச்சிலிருந்து லேட்டஸ்ட் தயாரிப்பு வரைக்கும் என்னிடம் கைவசம் உள்ளன.

75 ஆண்டு களுக்கு முந்தைய Jaeger-lecoultre கோல்டு வாட்ச் என்னிடம் உள்ளது. இதன் மதிப்பு ஒரு லட்சம். இந்த வாட்ச்சுகள் அனைத்தையும் பழுதாகாமல் பாதுகாப்பதே பெரிய வேலை. அதனால்தான் இப்போது வாட்ச் சேகரிப்பதை கொஞ்சம் கட்டுப்படுத்தியுள்ளேன். இருக்கிற வாட்ச்சுகளை பராமரிக்கிறதுக்காக தினம் ஒரு வாட்ச் அணிகிறேன்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாட்ச்சுகளோட வாழ்ந்துட் டதால “எது ஒரிஜினல் எது போலிங்கிறது” எனக்கு அத்துபடி. அதனால, எங்க பகுதி வி.ஐ.பி-க் கள் பழைய வாட்ச் வாங்கணும் என்றாலோ அல்லது ஸ்பேர் பார்ட்ஸ் வேணும் என்றாலோ என்னிடம்தான் வருவார்கள்.

என்னிடம் உள்ள வாட்ச்சு களோட மொத்த மதிப்பு என்னன்னு எனக்குத் தெரியாது. எனக்குப் பிறகும் இவை எங்க வீட்டிலேயே இருக்கப் போறதால மதிப்புப் போட்டுப் பார்க்க நான் விரும்பவில்லை’’ என்கிறார் மோகனசுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x