Published : 12 Mar 2015 10:05 AM
Last Updated : 12 Mar 2015 10:05 AM
நீலாங்கரையில் 196-வது வார்டு கவுன்சிலர் அண்ணாமலை தங்களை அவதூறாக பேசியதற்காகவும், அவர் மீது கொடுத்த புகாரை ஏற்க காவல்துறை மறுத்ததற்காகவும் துப்புரவு தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நீலாங்கரை காவல்நிலை யம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத் தில் 600-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் குப்பை லாரி கள், நாய் வண்டிகளுடன் திரண்டி ருந்தனர்.
செங்கொடி சங்கம் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கொடி சங்கத்தின் தலைவர் சீனிவாசலு இதுபற்றி கூறும்போது, “துப்புரவு தொழிலாளர்களை தகாத வார்த்தைகளால், மிக வும் அவதூறாக கவுன்சிலர் பேசி யுள்ளார். இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்ற போது புகாரை பெற மறுத்த தோடு, முதல்வரிடம் நேரில் சென்று மனு கொடுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் முதல் வரின் தனிப்பிரிவிலும் மனு கொடுத்து விட்டோம். ஆனால், புகார் ஏற்றுக் கொள்ளப் படாததால் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்” என்றார்.
பின்பு, சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களது புகாரை ஏற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை காவல் நிலையம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்: எம்.கருணாகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT