Published : 13 Mar 2015 10:25 AM
Last Updated : 13 Mar 2015 10:25 AM

பழநி கோயிலில் விரைவில் இரண்டாவது ரோப் கார்: உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி

பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால் நெரிசலைத் தவிர்க்க இரண்டாவது ரோப்கார் அமைப்பதற்காக தேவஸ்தானம் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. ஆரம்பகாலத்தில் பக்தர்கள் மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய படிப்பாதை வழியாக சென்றனர்.

690 படிகளைக் கொண்ட இந்தப் பாதையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் குழந்தை கள் மலைக்கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர் இவர்களுக் காக, அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்ல 1966-ம் ஆண்டு முதல் வின்ச் (மின் இழுவை ரயில்), 1981-ம் ஆண்டு 2-வது வின்ச், 1988-ம் ஆண்டு 3-வது வின்ச் தொடங்கப்பட்டன.

இவற்றின் மூலம் பக்தர்கள் 8 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கடந்த 2004-ம் ஆண்டு ரோப்கார் (கம்பிவட ஊர்தி) தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சாதாரண நாட்களில்கூட பழநி கோயிலுக்கு கேரளம், கர்நாடகம் மற் றும் வடமாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித் துள்ளதால் பக்தர்கள் 5 மணி முதல் 6 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், 2013-ம் ஆண்டு பழநி தேவஸ்தானம் இரண்டாவது ரோப்கார் அமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை 11 பேர் கொண்ட குழு அமைத்து உலகளாவிய டெண்டர் கோரியது.

தமிழக அரசின் டெண்டர் விதிமுறை யால் சர்வதேச ரோப்கார் நிறுவனங் கள் டெண்டர் எடுக்க ஆர்வம் காட்ட வில்லை. இதனால் இரண்டாவது ரோப்கார் அமைக்கும் திட்டம் கிடப் பில் போடப்பட்டது. தற்போது தேவஸ் தானம் இரண்டாவது ரோப்கார் அமைக்க உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது. வரும் 15-ம் தேதி வரை டெண்ருக்கான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முதல் ரோப்கார் அருகேயே ஒரு மணி நேரத்துக்கு 1,400 பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றுவரும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இரண்டாவது ரோப்கார் அமைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x