Published : 02 Mar 2015 10:31 AM
Last Updated : 02 Mar 2015 10:31 AM
கடலூர் மாவட்டம் காட்டுமன் னார்கோயில், சிதம்பரம் வட்டப் பகுதிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது வீராணம் ஏரி. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக மேட்டூர் தண்ணீர் வருகிறது. மேலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் கருவாட்டு ஓடை மற்றும் செங்கால் ஓடை வழியாக ஏரிக்கு வரும். இந்த வழிகளில்தான் ஏரிக்கு நீர் ஆதாரம் கிடைக்கிறது.
இந்த ஏரியை நம்பியே இப்பகுதியில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏரியில் இருந்து பூதங்குடி நீரேற்று நிலையம் மூலமாக சென்னை நகரின் குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஏரி தண்ணீரை யாரும் திறக்காமல் இருக்க பொதுப்பணித்துறையினர் ஏரியின் இரு கரைகளிலும் உள்ள பாசன மதகுகளில் இரும்பு கூண்டு அமைத்து ள்ளனர். இதற்கு விவசாயி கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் வெயில் காரணமாக வும் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதாலும் ஏரியின் நீர் மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.
ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி. தற்போது இது 46.70 அடியாக குறைந்துள்ளது. மேலும் கடுமையான வெயில் அடிப்பதாலும், சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்படுவதாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்திட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நீர்மட்டம் வெகுவாக குறைந்தால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
கீழணையில் தற்போது மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தினந்தோறும் அனுப்பப்படும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளுக்கு குடிநீருக்காக அனுப்பி வைக்கப்படுவதால் கீழணைக்கு தண்ணீர் வரத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT