Last Updated : 25 Mar, 2015 09:22 AM

 

Published : 25 Mar 2015 09:22 AM
Last Updated : 25 Mar 2015 09:22 AM

சென்னையில் பெருகி வரும் விதிமீறல் கட்டிடங்கள்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

விதிகளை மீறி கட்டப்பட்டும் கட்டிடங்களின் முகவரி மற்றும் உரிமையாளர்களின் விவரங் களை வெளியிட சிஎம்டிஏ முடி வெடுத்துள்ளது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் புற்றீசல் போல பெருகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சியும் விதி மீறிய கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, “கட்டிடம் கட்ட அளிக்கப்பட்ட திட்ட வரைபட ஒப்புத லுக்கு மாறாக, விதிகளை மீறி கட்டிடம் கட்டியிருப்பவர்களின் பட்டியலை தனது இணையதளத் தில் சிஎம்டிஏ இனி வெளியிடும்,” எனத் தெரிவித்தார். அது பொதுமக்கள் மற்றும் ஆர்வலர் களிடையே வரவேற்பைப் பெற் றுள்ளது.

சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடி குடி யிருப்புக் கட்டிடங்களை விவரம் தெரியாமல் வாங்கி, பின்னர் பல் வேறு விதங்களில் துயரங்களைப் பொதுமக்கள் சந்திக்க நேரிடுகிறது. சிஎம்டிஏ அளிக்கும் ஒப்புதல் ஒருபுறமிருக்க, சென்னை மாநகராட்சியால் தரப்படும் கட்டிட ஒப்புதல்களில்தான் அதிகளவில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் வரக்கூடிய (இரண்டு அடுக்கு வரை) கட்டிடங்களில் நடை பெறும் பெரும்பாலான விதிமீறல் களை அதிகாரிகள் கண்டுகொள் வதில்லை என்ற புகார் பல காலமாக இருந்துவருகிறது.

சென்னை மற்றும் அதன் புற நகர்ப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கட்டிடங் களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு வகையில் விதியை மீறி கட்டப்பட்டதாகவே இருக்கின்றன. இதுபோன்ற கட்டிடங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்க நினைத் தாலும், பல ஆயிரம் குடியிருப்புக் கட்டிடங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதைத் தடுக்க, அரசியல் குறுக்கீடே இல்லாத திட்ட ஒப்புதல் அமலாக்கக் குழு அமைக்கப்படவேண்டும். ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிடவேண்டும். மாநகராட்சியால் அனுமதி தரப்படும் கட்டிடங்கள் பெரும் பாலானவை, குடியிருப்புக் கட்டிடங்கள் என்பதால், இணை யத்தில் வெளியிடுவதால் சிக்கல் தீராது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x